UNLEASH THE UNTOLD

Tag: Skin colour

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையாரின் ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்

நானும் என் மனைவியும் அழகுக் கறுப்பு. இவன் மட்டும் எப்படியோ இப்படி வெள்ளையாகப் பிறந்து தொலைத்துவிட்டான். சிறு வயது முதலே பார்க்காத வைத்தியம் இல்லை. மிளகு, கடுகு, கருஞ்சீரகம் அரைத்துப் பூசிக் குளிக்க வைத்திருக்கிறேன். நண்பகல் வெயிலில் ஒரு மணி நேரம் நின்றால் உடல் விரைவில் கருக்கும் என்று யாரோ சொன்னதை நம்பி அதையும் செய்து வருகிறான். இருந்தும் மேனி பூஞ்சைக்காளான் பூத்தது போல் வெள்ளை நிறமாகவே உள்ளது.

பொண்ணு அவ அப்பா மாதிரி கறுப்பா இருக்கா...

தான் குழந்தையா, சிறுமியா, குமரியா என்றெல்லாம் அறிந்துகொள்ள அவள் முற்படும் முன் முந்திக்கொண்டார்கள் ‘அந்த நாலு பேர்’. “பொண்ணு அப்படியே அவங்க அப்பாவ மாதிரி இருக்கால்ல, உங்க நிறம் இல்லை” என்று அவள் இருக்கும்போதே அவள் அம்மாவிடம் வருத்தம் தெரிவித்தார்கள். கறுப்பான அப்பா மீது வராத கோபம், சிவப்பாக இருந்த அம்மா மீது வந்தது. அவளைவிட வளர்ந்திருந்த உடன்பிறப்புகள் மீது வந்தது.

பொண்ணு கறுப்பா?

ஆப்பிரிக்கக் கண்டம் போன்ற நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழும் பகுதியில் வருடம் முழுவதும் வெயில் அடிப்பதால் அவர்கள் தோலில் மெலனின் நிறமி செல்கள் அதிகமா உருவாகி, கறுப்பாக இருக்கிறார்கள்.