UNLEASH THE UNTOLD

Tag: religion

அர்த்தமுள்ளதா இந்த மதங்கள்?

பெண்கள் அதிகளவில் சாமியார் மடங்களிலும், கோயில்களிலும் குவியக் காரணம் என்னவென்றால் மூச்சுமுட்ட வைக்கும் வீட்டுச் சிறையில் இருந்து கொஞ்ச நேரமேனும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான். சக பெண்களைப் பார்க்கவும், கொஞ்சம் வெளிக் காற்றைச் சுவாசிக்கவும், சிறிது நேரமேனும் தனிமையில் இருக்கவுமே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அது புரியாமல் இந்தச் சாமி சமாச்சாரங்களை எல்லாம் பெண்களின் தலையில் ஆண்கள் கட்டக் காரணம் என்னவென்றால் பெண்கள்தாம் எந்த ஒரு விஷயத்தையும் அடுத்த தலைமுறைக்கு எளிதில் கடத்துகிறார்கள் என்பதால் தான்.

அடையாளத்தில் பெருமை இருக்கிறதா, இல்லையா?

பொதுவில், சுயமாக உழைத்து தனக்கென ஓர் அடையாளத்தைச் சம்பாதிக்க திராணி இல்லாதவர்கள்தாம், பிறப்பு அடிப்படையில் சமூகம் சூட்டும் அடையாளங்கள் மூலம் பெருமையைத் தேடிக்கொள்கிறார்கள். இவ்வகை பெருமைகள், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அப்படியே தொடர வைக்கின்றன. மாறாக, ஒருவர் சொந்த முயற்சியினால் ஒப்பீட்டு அளவில் ஒரு சின்ன சாதனை செய்தால்கூட மற்றவரின் பெரிய சாதனைக்குச் சற்றும் சிறுமை ஆகாது. இங்கு நேர்மையாக உழைத்து, சுயமாக உருவாக்கப்படும் ஒவ்வோர் அடையாளமும் சமமே. எனவே, நம் சொந்த முயற்சியால் நம்மால் நமக்காக உருவாக்க முடிந்த அடையாளங்களைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வோம்.

இந்தியாவில் பெண்களின் நிலை என்ன?

ஒவ்வோர் இந்திய வீட்டிலும் மனுஸ்மிருதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாய்மொழியாகவும் வாழ்வியல் வழியாகவும் சமூக உரையாடல்கள் வழியாகவும் இன்றும் மனுஸ்மிருதி புழக்கத்தில்தான் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் சனாதன தர்மத்தில் உள்ள ‘வர்ணாஷ்ரம தர்ம’ சாதி அமைப்பால் ஒடுக்கப்படுகிறார்கள்.