UNLEASH THE UNTOLD

Tag: P. Anintha Balakrishnan

திருட்டுப் பட்டம்

மகன் வருகைக்காக வீட்டு வாசலுக்கும் மாடி பால்கனிக்குமாக நடந்த சகாயமேரிக்கு மனம் அலைக்கழிந்தது. ”மழ வேற பெஞ்சுட்டு கெடக்கு , இந்தப் பயல இன்னும் காணோமே” என்று எண்ணுக்குத் தொடர்பு கொண்ட போது கரகரவென்று…

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

திருநெல்வேலியிலோ பாளையங்கோட்டையிலோ உள்ள  கல்லூரியில் அவள் படித்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிட்டு வழக்கமாக அவள் திரும்புவது போல் இன்று தோன்றவில்லை. சோகமே உருவமாக அவள் முகமும், வழக்கத்துக்கு அதிகமான அவள் பைகளும், தலையில் முக்காடிட்டவாறு அவளோடு அமர்ந்திருக்கும் அவள் மாமியும் இந்தச் சந்தேகத்தைக் கொடுத்தது.

பெண்களைப் பயமுறுத்தும் பூச்சாண்டிகள்

‘நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டதுபோல், அவர்களும் தங்களைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்வார்கள்’ என்று கூறினாள். அது உண்மைதான், ‘ஆனால் பெண் குழந்தைகளுக்குத் தற்காப்பு கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளிடம் எப்படி மரியாதையுடனும், அவர்களும் நம்மைப்போல் சக மனிதர்கள், அவர்களை நம் வீட்டுப் பெண்களை எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்போமோ அதைப் போன்ற பாதுகாப்பான உணர்வுடன் வெளியுலகைக் காணும்படியும் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்’ என்கிற அவள் வார்த்தைகள் தனிப்பட்ட கருத்து என்பதைவிட, சமூகக் கடமையாக மாறினால் இந்த நிஜ வாழ்க்கை பூச்சாண்டிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

பொண்ணு அவ அப்பா மாதிரி கறுப்பா இருக்கா...

தான் குழந்தையா, சிறுமியா, குமரியா என்றெல்லாம் அறிந்துகொள்ள அவள் முற்படும் முன் முந்திக்கொண்டார்கள் ‘அந்த நாலு பேர்’. “பொண்ணு அப்படியே அவங்க அப்பாவ மாதிரி இருக்கால்ல, உங்க நிறம் இல்லை” என்று அவள் இருக்கும்போதே அவள் அம்மாவிடம் வருத்தம் தெரிவித்தார்கள். கறுப்பான அப்பா மீது வராத கோபம், சிவப்பாக இருந்த அம்மா மீது வந்தது. அவளைவிட வளர்ந்திருந்த உடன்பிறப்புகள் மீது வந்தது.