கை கொடுக்கும் கை
“ஆரது? ஆரது இந்நேரம் கதவ தட்டீனுக்கது?”என்று முன்கதவை ‘படார் படார்’ என்று யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, அதட்டலாகக் குரல் கொடுத்துக் கொண்டே போனார். வெளியே இருந்த கூச்சலும் குழப்பமும் அவ்வளவாக உள்ளே…
“ஆரது? ஆரது இந்நேரம் கதவ தட்டீனுக்கது?”என்று முன்கதவை ‘படார் படார்’ என்று யாரோ வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, அதட்டலாகக் குரல் கொடுத்துக் கொண்டே போனார். வெளியே இருந்த கூச்சலும் குழப்பமும் அவ்வளவாக உள்ளே…
“மாப்ள, நீங்க யாராவது ஒருத்தர்கூட வந்து பேசுனா கொஞ்சம் நல்லா இருக்குமுடா. ஏற்கெனவே எல்லாரும் கொந்தளிச்சுப் போய்க் கிடக்குறாய்ங்க. என்ன கிழி கிழிக்கிறாயிங்க தெரியுமா? பதில் சொல்ல முடியாம திணறிட்டோம்டா” என்று அவன் நண்பன்…
காரில் கிளம்பிச் செல்லும் மகளையே கண் கொட்டாமல் மாடியிலிருந்து பார்த்த ராணிக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அதுவும் அவள் தெருமுனையில் சென்று திரும்பி மறையும் வரை மாடியையே பார்த்துச் சென்றதைக் கண்ட போது…
“இது எப்படி நடந்துச்சு?” என்று பரபரப்பாகக் கேள்வி கேட்டுக் கொண்டே பெர்மனன்ட் வே இன்ஸ்பெக்டர் அழகேசன் உள்ளே வரவும், அதுவரை கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குப் பதிலளித்து விட்டு ஸ்டேசன் மாஸ்டரும் சிவாவும் அவரை வரவேற்கவும்…
ஆனந்தகன்னியம்மனின் குறுநகை தவளும் கனிவான முகத்தை உற்றுப் பார்த்தபடி அமைதியே உருவாக நின்ற அம்மாவின் நிச்சலனமற்ற முகத்திலிருந்த அமைதி அவனுக்கு ஒருவித கலக்கத்தைத் தந்தது. மழை காரணமாகத் திண்ணையில் அடுப்பு கூட்டி கதையடித்தபடி சிரித்துக்…
“ஏம்மா நீ தண்ணியடிப்பியா?” என்று மருத்துவர் அவளை அதட்டிக் கேட்ட போது உமா மகேஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை . பிறந்தது முதல் ஒருவித அமைதியற்று காணப்படும் , சத்தமிட்டு அழும் மகனுக்கு ஏதோ பிரச்னை…
உண்மையில் சிவகாமிக்கு மீனா பேரில் பெரிதாக பாசமோ கரிசனமோ எப்போதுமே இருந்ததில்லை. தன்னைவிட நான்கைந்து வயது சின்னவளுக்கு சந்தர்ப்ப சூழலால் சித்தி ஆனதோ, தன்னைவிடப் பன்னிரண்டு வயது பெரிய மனுசனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டதோ அவளுக்குப் பிடித்தோ, அவளைக் கேட்டுக் கொண்டோ நடந்த காரியங்கள் இல்லை. கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்ததால் ஏற்பட்ட கதி.
கைக்கடிகாரம் 8.30 என்று காட்டியது. இந்நேரம் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து கிளம்பி இருக்கும். இனியும் யோசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை, விரைந்து சென்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்று திரும்பியவர் கால்களில் இருந்த ஷுவின் கணமும் உணர்ச்சியின் வேகமும் சேர்ந்து பின்னால் இழுத்தது.
“மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. பேசாம ஞாயித்துக் கிழம கிளம்பாம ரெண்டு பேரும் திங்கக் கிழம எங்கூடவே கிளம்புங்களேன்” என்றான் பொன்துரை. வழக்கமாக இப்படி எல்லாம் சொல்பவனில்லை. ஏன் இப்படிச் சொல்கிறான் என்று யோசித்தவளுக்கு, “ஓ, இப்ப புரியுது. வழக்கம் போல மங்களத்தை நாங்க கிளம்புற அன்னைக்கு வராம அடுத்த நாள் வராங்களே. அதனால இவ வேற அவ அப்பாவுக்கு சேவகம் செய்யச் சொல்றாளேன்னு தானே எங்கள அடுத்த நாள் போகச் சொல்றே?”
அவன் ஆச்சியின் குரலும் அவர் வைத்திருந்த விளக்கின் வெளிச்சமும் ஆட்டுக் கொட்டகையில் அவர் இருப்பதைக் காட்டியது.
“சம்முசுந்தரம், இங்க வா ராசா. ஆத்தா கிட்ட வாடா. உன்னய பத்திரமா கூட்டிப் போறேன். ஏட்டி அழகம்ம இந்தா உனக்கு புடிச்ச உடமணி, வந்து சாப்பிடு” என்று குழந்தையைக் கொஞ்சும் குரலில் பேசிக் கொண்டிருந்ததும் , பதிலுக்கு அவை ‘ம்மேமே’ என்று கத்துவதும் காதில் விழுந்த போது அவனுக்குக் கோபம் வந்தது.
“பகல்லதான் ஆடே உலகம்ன்னு கெடக்குறா சரி. நடுராத்திரியில இந்த மழைக்குள்ள அதுவும் கரண்டு இல்லாத நேரம் ஆட்ட கட்டிக்கிட்டு அழலன்னு யாரு கேட்டா?”