நூடுல்ஸும் விவாகரத்தும்
சமையல் என்பது அருமையான கலை. அதைப் பெண் மட்டுமே செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது அப்பட்டமான உரிமை மீறல். ஆண், பெண் இருபாலரும் சமையல் பொறுப்பை ஏற்பதுதான் சமத்துவமான உலகிற்கு இட்டுச் செல்லும்.
சமையல் என்பது அருமையான கலை. அதைப் பெண் மட்டுமே செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது அப்பட்டமான உரிமை மீறல். ஆண், பெண் இருபாலரும் சமையல் பொறுப்பை ஏற்பதுதான் சமத்துவமான உலகிற்கு இட்டுச் செல்லும்.
ஆண்கள் வேலை செய்வதை முதலில் பெண்கள் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எத்தனை ஆண்கள் தங்கள் வீட்டுக் கழிவறை, குளியலறைகளைச் சுத்தம் செய்கிறார்கள்? சமைத்தல், சுத்தம் செய்தல், துவைத்தல் போன்ற பொதுவான வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் பாலினப் பாகுபாடு இன்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
பெண் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகவே இருந்தாலும், “வீட்டில சமைப்பீங்களா? நீங்க சமைக்கறதுல உங்க குழந்தைகளுக்குப் பிடிச்ச ரெசிப்பி என்ன?” போன்ற அநாவசிய கேள்விகளைக் கேட்டு, அவர் வீட்டில் சமைப்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றன. “வீட்டில் சமைக்க மாட்டேன்” என்று வெளிப்படையாகச் சொல்லும் பெண்ணை, “நீயெல்லாம் ஒரு பெண்ணா” என்று மறைமுகமாகக் குத்திக் காட்டி பகடி செய்கின்றன. இது அப்பட்டமான உரிமைமீறல்.