UNLEASH THE UNTOLD

Tag: Jansi shahi

இழப்பதற்கு என்ன இருக்கிறது?

பொருளாதாரமும் உறவுகளும் அல்லது சொத்து சுகங்களும் உங்களுக்கு இழப்பதற்கான ஒரு விஷயமாக இருந்தால், ஒன்றை நினைவில்கொள்ளுங்கள், எந்த நேரமும் அந்த விஷயங்களைப் பன்மடங்காக உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

நீங்கள் குழந்தைகளின் பொறுப்பாளரா, உரிமையாளரா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாருக்கு நடனம் பிடிக்கிறதோ, அவர்கள்தானே நடனம் கற்றுக்கொள்ள வேண்டும். எதற்காக அவருடைய குழந்தையைக் கற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்? அவருக்குக் கால்கள் நன்றாகவே இருக்கின்றன. வயது ஒரு தடையே அல்ல. பொதுவாக நம் கடந்துபோன கனவுகளை, இப்படித்தான் குழந்தைகளிடம் சுமத்திக்கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளை நல்வழிப்படுத்த எளிதான உத்திகள்

அன்புக்கும் (love) ஆடம்பரச் சலுகைக்கும் (pampering) வித்தியாசம் உண்டு. அந்த வித்தியாசத்தை உணர்ந்து, குழந்தைகளுக்கு அன்பை மட்டுமே கொடுங்கள். ஆடம்பரச் சலுகைகளை அல்ல.

பெற்றோரைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளே குழந்தைகள்!

நம்மில் எத்தனை பேர், பெற்றோராக இருத்தல் என்பது கடினமான, அர்ப்பணிப்பு மிகுந்த, நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டிய ஒரு பொறுப்புமிக்க வேலை என்பதை உணர்ந்து அதற்கான தயாரிப்புகளோடு பெற்றோராக ஆனோம்?

கண்ணாடியில் விழுந்த கீறல்கள்

20 வயது நிரம்பிய, வேலைக்குப் போய்க்கொண்டு சுயமாகச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் இளம்பெண் இப்படிப் பேசிக்கொண்டிருந்தார். “அம்மாவுக்குக் கோபம் வந்தால் எல்லாக் கோபத்தையும் என்மீது காட்டுவார்; அடித்துவிடுவார்; நன்றாக அடித்துவிடுவார்” என்று சொன்னார்.

பிள்ளைகளுக்கான பரிசு!

நீங்கள் கோடிகள் சம்பாதித்துவிட்டு பெருமிதப் புன்னகையுடன் நிற்கும் போதும் சரி, உலக சாதனை படைத்துவிட்டு மார்தட்டி புகழின் உச்சியில் மிதந்து கொண்டிருக்கையிலும் சரி, வெற்றிகளைக் குவித்து, பெரிய சபைகளில் விருதுகளைப் பெற்று கௌரவம் கொள்கையிலும் சரி, பிள்ளை மனங்கள், உங்கள் கண்களில் தேடுவது எல்லாம், உங்களின் உள்ளார்ந்த மகிழ்ச்சி.

நான் எனும் பேரதிசயம்!

ஜோசப் மர்ஃபி என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய ‘ஆழ்மனதின் அற்புத சக்தி’ என்ற நூலில் மனதை, ‘எண்ணமும் உணர்வும் சக்தியும் ஒளியும் அன்பும் அழகும் நிறைந்த உள் உலகு’ எனக் குறிப்பிடுவார். மேலும் ‘அது கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்தது. எந்த ஒரு பிரச்னைக்கான தீர்வையும் எந்த ஒரு விளைவுக்கான காரணத்தையும் உங்கள் ஆழ்மனதில் கண்டறியலாம்’ எனச் சொல்வார்.