உறவுகள்
சாதியக் கட்டமைப்பில் புரையோடி போன நம் சமூகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம் என் மனதில் இந்த மரபணுக் குறைபாடுகள்தான் நினைவுக்கு வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் தாய்மாமாவை, அக்கா அல்லது தங்கையின்…

கற்றலும், எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட பயிற்சியும், அறிவாற்றலும் தனிநபரை மட்டுமே சார்ந்ததே தவிர, அது மரபணுக்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாகச் சுற்றுச்சூழலும், உணவு பழக்கவழக்கங்களும், கன உலோகங்கள், கதிர்வீச்சுகள், நச்சுகள் முதலியவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்வதும் தாயனையில் பிறழ்வுகள் ஏற்படுத்தலாம். அதனால் புற்றுநோய் போன்ற நோய்களும் வரலாம். அது அடுத்த தலைமுறையினரைப் பாதிக்கவும் செய்யலாம்.
ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்கள் அனைத்தும் தங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திக் கொண்டேதான் இருக்கும். ஒரு மாமரத்தில் இருந்து இன்னொரு மாமரம் உருவாக முடியும் என்பதுதான் ஓரறிவு உயிரினங்களும் மரபணுக்களைக் கடத்துவதற்கான சான்று. இதைத்தான் மரபியலின் தந்தையான கிரிகர் ஜான் மெண்டல் (Gregor John Mendel) பட்டாணியில் நிகழ்த்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.