UNLEASH THE UNTOLD

Tag: gender bias

'பல தளங்கள் கொண்ட ஒரு மாளிகை'

“இங்கே எனக்கான கழிப்பிடம் இல்லை. இந்தக் கட்டிடத்திலேயே வேற்று நிறத்தவருக்கான கழிப்பிடங்கள் இல்லை. சற்றுத் தூரத்தில் மேற்கு வளாகத்தில் எங்களுக்கான கழிப்பிடங்கள் இருக்கின்றன, அது அரை மைல் தள்ளி இருக்கிறது. உங்களுக்கு இது தெரியுமா?…

ஆண்கள் பலவீனமானவர்கள்...

2021ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரப்படி தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்கள் 72.5சதவீதம், பெண்களோ 27.5 சதவீதம். ஆனால், அறிவியலுக்குச் சம்மந்தமே இல்லாத நம் மதங்கள் என்ன சொல்கின்றன? முதலில் படைக்கப்பட்டது ஆண்தான் என்றும் அவனுக்குத் துணையாகப் பெண்ணைப் படைத்தான் என்றும் பெண்ணைப் பாதுகாப்பதே ஆணின் தலையாய கடமை என்பது போலவுமான உருட்டுகளை உருட்ட, உண்மைக்குத் தொடர்பே இல்லாத கற்பிதங்களை மனிதர்கள் கடைப்பிடிப்பது இன்றும் தொடர்கிறது.

டீக்கடை அரட்டையும் டிவி அரட்டையும்

“அதை ஏன் கேட்குறீங்க? டீமில் புதுசா ஒரு பையனை வேலைக்கு எடுத்தேன். அதுலேருந்து பெரிய தொல்லை. வீட்ல மாமியாருக்கு உடம்பு சரியில்ல, புள்ளை ஸ்கூலுக்குப் போகணும்னு அடிக்கடி லீவு, லேட்டு. இதுல அவ சிரிக்கிறா, கேலி பண்றான்னு யார் மேலயாச்சும் புகார் வேற. இன்னிக்கு என்னடான்னா சாப்டாம வேலைக்கு வந்துருப்பான் போல, மயங்கியே விழுந்துட்டான். ஆனா ஒண்ணு, வேலைல அக்கறை இருக்கோ இல்லியோ, சும்மா பொழுதைப் போக்கணும்னு வந்துடுறாங்க. சே இனிமே டீம்ல பையனுங்களையே வேலைக்கு எடுக்கக் கூடாது!”

சிபி, ஒரு டீ...

அயர்ந்து உறங்கும் சிபியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு, அதைவிட மென்மையான குரலில், “சிபி, டீ தாப்பா!” என்று எழுப்பிவிட்டு விட்டு மொட்டை மாடிக்கு வந்தாள்.

இனியும் தொடர்ந்து விளையாடுவீர்களா?

நெ: சிறப்பான முடிவு. தந்தைமையின் புனிதம் எவ்வளவு உயர்வானது என்று நிரூபித்துவிட்டீர்கள். புகழ் மிக்க விளையாட்டு வீரராக இருப்பது, பொறுப்பான அன்புத் தந்தையாக இருப்பது, ஓர் ஆணுக்கு எது முக்கியம் என்று கருதுகிறீர்கள்?

உலகின் முதல் புகைப்படக் கலைஞர்- சாரா!

படத்தில் ‘பெயரியப்படாத கலைஞர்’ என்று எழுதப்பட்டது. ‘வரலாறு முழுக்க பெண் பெயரிடப்படாதவள்’ (For most of history, anonymous was a woman) – நினைவுக்கு வருகிறதா?