குழந்தைகள் ஆளுமைகளாக வழிகாட்டுவோம்!
சிறுவயசுல சில விஷயங்களைத் தனித்துச் செயல்பட பழக்கலாம். தான் அணியும் துணிகளைத் தேர்ந்தெடுத்தல், வளரிளம் பருவத்துல தனித்துச் செயல்பட வழிகாட்டிட்டு, பிழை செய்யின் அப்பவே குறுக்கிடாம அதற்குப் பிறகு அந்தச் செயல் குறித்து உரையாடலாம். இந்த உரையாடல் அவர்களோட செயல்பாட்டை நெறிப்படுத்தும். அதைவிடுத்து நாம் அறிவுரை வழங்கிட்டே இருந்தோம்னா அவர்கள் அதை என்னவென்றுகூடக் கேட்க மாட்டார்கள். மாறாகத் தன்னை மனிதனாக அங்கீகரிக்காதது போல உணர்கிறார்கள். அவர்களை அங்கீகரித்து பொறுப்புகள் வழங்கி பெருமூளையை வலுப்படுத்துவோம்.