UNLEASH THE UNTOLD

Tag: child abuse

பூக்களைப் பறிக்காதீர்கள்...

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒரு தனிநபர் பிரச்னையோ அல்லது அந்தக் குழந்தையின் குடும்பம் சார்ந்த பிரச்னையோ மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த சமுதாயம் சார்ந்த ஒரு பொதுவான பிரச்னை. இதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டுத்தான் தீர்வு காண வேண்டும். குழந்தைகளுக்கு இனிமையான நினைவுகளை மட்டுமே நாம் பரிசளிக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்கள்தாம் நாளைய இந்தியத் தூண்கள். அவற்றை உளுத்துப் போனதாக வளர்க்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்று ஓர் உலகம் இருக்கிறது. அது அமைதியாக, அழகாக இருப்பது மிகவும் அவசியம்.

சக்தி

இப்போதெல்லாம் அம்மாவின் ஞாபகங்களும் அவளிடம் கேட்கவென பல கேள்விகளும் சக்திக்கு அடிக்கடி எழுகின்றன. கேட்டால் அவளும் கத்துவாளா? சக்தியின் ஞாபகங்களில் அம்மா அவளுடன் அதிரக் கத்தியதாக நினைவில்லை. மூன்று வயதில் சக்தியைப் பிரிவதற்குள் அப்படி என்ன பெரிய தப்பைதான் செய்துவிடக் கூடும் கத்துவதற்கு என எண்ணிக்கொண்டாள் . ஆனாலும் அவளுக்கு அம்மாவிடம் நிறையக் கோபம் உண்டு. தன்னை விட்டுவிட்டுப்போன கோபம். இப்போதும் அந்தக் கோபம் வந்தது.

குழந்தைகளிடம் உரையாடுகிறோமா?

‘பாலியல் குற்றவாளிகள் யாரோ வெளிக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல; நம் சமுதாயத்தின் ஒரு பகுதி; தான் செய்தது குற்றம் என்றே அவர்கள் உணரவில்லை’