UNLEASH THE UNTOLD

Tag: Ariviyal Aaraichiyil Pengal

<strong>மனிதநேயத்தை மறக்காத இயற்பியலாளர்</strong>

நியூட்ரான்களைக் கொண்டு இடித்தால், யுரேனியம் இரண்டு தனிமங்களாகப் பிரிவதாக ஹானின் குழு கண்டுபிடித்தது. வியந்துபோன ஹான், ‘இது ஏன் நிகழ்கிறது என்பதற்கான அட்டகாசமான விளக்கம் ஒன்றை நீங்கள் தருவீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று மெய்ட்னருக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தைப் படித்துத் தரவுகளை ஆராய்ந்து, ‘அணுக்கரு பிளவு’ (Nuclear fission) என்ற கருத்தாக்கத்தை மெய்ட்னர் முன்வைத்தார். அணுக்களின் காலகட்டம் பிறந்தது. வரலாறு அந்த நொடியிலிருந்து மாறியது.

<strong>டி.என்.ஏ ஆராய்ச்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்டவர்</strong>

இந்தப் படிகவியல் ஆராய்ச்சியில் டி.என்.ஏ படிகங்களை ஆராயத் தொடங்கினார். அவரது ஆராய்ச்சியில் 1952ஆம் ஆண்டில் Photo 51 என்று அழைக்கப்படும் ஒரு புகழ்பெற்ற படிகவியல் படம் எடுக்கப்பட்டது. இந்த ஒரு புகைப்படத்தை எடுக்கவே 100 மணி நேரம் ஆனதாம், புகைப்படத்திலிருந்து கிடைத்த தரவுகளைக் கணக்கிடவே ஓர் ஆண்டு ஆகியிருக்கிறது! இந்த ஆராய்ச்சியில் எடுக்கப்பட்ட 51வது புகைப்படம் என்பதால் அப்பெயர் வந்தது என்பதும் கூடுதல் தகவல். இந்த 51வது புகைப்படம்தான் டி.என்.ஏ வடிவத்திற்கான முழுமுதல் ஆதாரமாக மாறியது.

<strong>அமெரிக்காவின் முதல் பெண் நிலவியலாளர்</strong>

ஆய்வுப் படிப்பில் சேர்ந்த பிறகும் ஃப்ளாரன்ஸுக்கு சிக்கல்கள் தொடர்ந்தன. ஆண் மாணவர்கள் பலர் இருக்கும் அறையில் ஒன்றாக அமர்ந்து வகுப்புகளைக் கவனித்தால் ஃப்ளாரன்ஸின் இருப்பு அவர்களைத் திசைதிருப்பும் என்பதால், ஃப்ளாரன்ஸை வகுப்பறையின் கடைசியில் உட்கார வைத்தார்கள். அவருக்கும் பிற மாணவர்களுக்கும் இடையில் ஒரு திரையும் போடப்பட்டது. இது மாணவர்களிடமிருந்து மட்டுமன்றி, ஆசிரியர்களின் பார்வையிலிருந்தும் ஃப்ளாரன்ஸை மறைத்தது. நேரடியாக ஆசிரியர்களைப் பார்க்காமலேயே ஃப்ளாரன்ஸ் பாடம் கற்றார்.