UNLEASH THE UNTOLD

Tag: கீதா பக்கங்கள்

'நா ஹவுஸ் வொய்ஃப் தாங்க'

கல்யாணமே பெண்ணின் தேர்வாக இல்லாத போது, ‘ஹவுஸ் வொய்ஃப்’ என்பது மட்டும் அவள் தேர்வாக இருக்க முடியுமா? ஹவுஸ் வொய்ஃப்பாக இருக்கும் தோழிகளை, empathyயோடு பார்ப்போம்

பெண்ணுக்கு புடவை தான் வசதியா?

“நாங்கள் புடவை கட்டிக் கொண்டுதானே இத்தனை வருடமாக செய்கிறோம், எங்களுக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லையே”, என்று மூத்த பெண்கள் சொல்லலாம். நீங்கள் புடவையை பழக்கப்படுத்திக் கொண்டு விட்டீர்கள், அதனால் உங்களுக்கு சிரமமாகத் தெரியவில்லை, தோழியரே ! எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்தாது. அடித்தட்டுப் பெண்கள், புடவையினால் அதிகம் சிரமப்படுகிறார்கள். வயல் வேலை, கட்டிட வேலை செய்யும் பெண்களெல்லாம், புடவை வசதியாக இல்லை என்பதால், மேலே ஆண்களின் ஷர்ட் ஒன்றை அணிந்து கொள்கிறார்கள், முந்தானையை சரி செய்யும் தொல்லையிலிருந்து தப்பிக்க. ஆனால், ‘மொபிலிட்டி’ எனப்படும் சரளமாக விரைந்து நடக்கும், ஓடும் தன்மையை, புடவையும், உள்பாவாடையும் தடை செய்கின்றன.

யாருங்க இந்த குடும்பப் பெண்?

கல்யாணத்திற்கு முன்பு, தான் விரும்பும் வண்ணத்தில், விரும்பும் ஆடைகளை அணியும் பெண்ணையும், குட்டை முடி வைத்திருக்கும் பெண்ணையும், மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டுக்கு வரும் பெண்ணையும், “இதெல்லாம் குடும்பப் பெண்ணுக்கு அழகா? இப்படியெல்லாம் அலைஞ்சா, நாளைக்கு உன்னை எவன் கட்டுவான்?” என்று குடும்பத்தினர் கண்டித்து திருத்தப் பார்ப்பார்கள். முடியாவிட்டால்,”கல்யாணம் வரைக்குமாவது கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடந்துக்கோ”, என்று கெஞ்சுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு ? அதை புகுந்த வீடு பார்த்துக் கொள்ளும்.