UNLEASH THE UNTOLD

Tag: அடுக்களை டூ ஐ நா

விசாவுக்கு எம்புட்டு வெசனம்...

“இது தேவையா என்று தோன்றியது. ஐ நா, சர்வதேச கருத்தரங்குகளுக்கு செல்ல வழியை எளிமைப்படுத்தாத கல்வித்துறையின் ஆதிகால விதிமுறைகளை நினைத்து சலிப்பு ஏற்பட்டது.”

சும்மா கிடைக்குமா சான்ஸு?

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 5,65,639 என்கிறது அரசு புள்ளி விபரம். இது தவிர தனியார் பள்ளி ஆசிரியர்கள் இரு மடங்கு அதிகம். “இத்தனை ஆசிரியர்கள் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி ஐநா வாய்ப்பு? எது உங்களை ஐ.நா. ஹெவியா லைக் பண்ண வெச்சுது? அரசியலா? பணமா? குடும்பமா? யாரோட சப்போர்ட்ல உங்களை தேர்ந்தெடுத்தாங்க? என்ன பின்புலம்?”, ஐந்தாண்டுகளாக தொடரும் கேள்விக் கணைகள். ஆனா ஒரு புலமும் இல்லை என்பது தான் நிஜம்.

ஒரு கதை சொல்லட்டா, ஃப்ரெண்ட்ஸ்?

“பொம்பளபுள்ள, ஆம்பளைக்கு சமமா போய் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து படிக்கறா பாரு” என்று மோவாயில் கை வைத்து அதிசயப்பட்ட ஊர்ப் பெருசுகளைக் கண்டுகொள்ளாமல், “ நீ நெறய படிக்கணும்” னு கழுத்தப்பிடிச்சு லைப்ரரிக்குள்ள தள்ளிவிட்ட அம்மாதான் இத்தனைக்கும் காரணம்.