பிளஸ் டூ ஃபேர்வல் பார்ட்டிக்கு சேலை கட்டிக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னார்கள்.

முதலில் நான், சேலையைக் கட்டிக் கொண்டு போகப் போவதில்லை என்று நினைத்தேன். ஆனால், அது பள்ளியின் கடைசி நாள். எனக்கு சேலை பிடிக்கும். ஆனால், நான் கட்டிக் கொள்ளப் பிடிக்காது.

இதற்கு முன் இரண்டு முறை கட்டியது உண்டு. முதலில் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது; மற்றொன்று பள்ளி விளையாட்டு தினத் தொடக்க விழாவில் கட்ட வேண்டியதாக ஆயிற்று. அப்பொழுது சேலையைக் கட்டிக்கொண்டு நடப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்தது.

சேலை பற்றி என்ன நினைக்கிறேன் என்றால், அது தமிழ்நாட்டின் கலாச்சார உடை. ஆனால், அதை கட்டிக்கொண்டு எதையும் செய்ய இயலாது. நீங்கள் சொல்லலாம், எதையும் செய்துகொண்டே இருந்தால் பழக்கம் ஆகிவிடும் என்று. சரிதான். ஆனால், நான் சேலையை ஒரு சிறந்த உடை என்று பரிந்துரைக்க மாட்டேன். நீங்கள் சேலையைக் கட்டிக்கொண்டு எங்கேயும் உட்கார முடியாது. அப்படி முடிந்தால் அது ஒருவேளை குளிரூட்டப்பட்ட அறையாக இருக்கும்.

என்னைப் பொறுத்த வரைக்கும் சேலை என்பது ஒரு வசதியான உடை அல்ல. சேலை கட்டினால் அது எந்த உடையும்விட காற்று போவதற்கு  நன்றாகத்தான் இருக்கும். நான் பொதுவாக பேண்ட் சர்ட், குர்தா அணியத்தான் விரும்புவேன்.

சேலையைக் கட்டினால் நம் கவனம் முழுவதும் சேலையில்தான் இருக்க வேண்டும். சேலை விலகாமல், சரிசெய்துகொண்டே இருக்க வேண்டும். உடை என்பது ஒருவருக்கு வசதியாக இருக்கிறதா என்பதைப் பொறுத்துதான், அது பிடித்த உடையாக இருக்க முடியும்.

சில பேர் சொல்வார்கள் நீங்கள் தமிழ் பாரம்பரியத்தைவிட்டு மற்றொன்றைப் பின்தொடர்கிறீர்கள் என்று. இங்கிருக்கும் தட்பவெட்பத்திற்கு ஏற்றபடிதான் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் உடைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன?

என் பள்ளியில் ஒன்றாவது முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகள் பினோ பார்ம் மற்றும் சட்டைன் போட வேண்டும். அது பாலிஸ்டர் மெட்டீரியலில் தைக்கப்பட்டது அது வெயில் காலத்தில் மிகவும் வியர்வையாக இருக்கும்

நான் பொதுவாக என் உடை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எல்லாம் யோசிக்க மாட்டேன்; அது மற்றவர்களை பாதிக்கப் போகிறது அல்ல, எனக்கு எது வசதியானதோ அதைத்தான் பயன்படுத்துவேன்.

கல்லூரியில் என்னுடைய சீனியர் கம் ரூம் மேட் பாத்திமாவுக்கும் எனக்கும் காலேஜ் எத்திக் டே முந்தைய நாளில் ஒரு விவாதம் ஏற்பட்டது அவர் கேட்டார்,  ‘நீ நாளைக்கு சேலை கட்டப் போகிறாயா?’ என்று.

“எனக்கு அதைக் கட்ட விருப்பமும் இல்லை; கட்டவும் தெரியாது” என்றேன்.

”இப்ப கட்டாம எப்ப கட்ட போற? நீதான் இந்த மாதிரி தருணங்களை நழுவ விடுகிறாய்.”

”எத்திக் டே அன்று நான் குர்தாதான் போடுவேன்.”

”குர்தா என்பது நார்த் இந்தியன் கல்ச்சர்.”

”சேலைதான் பாரம்பரியம் என்றால் அப்படி ஆழமாகப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பவர்கள் எல்லாவற்றிலும் கடைபிடிக்க வேண்டும். எல்லாமே எப்பொழுதும் ஒரே போல இருக்கப் போவதில்லை. காலத்திற்கேற்ற மாதிரி அது மாறும்; மாற வேண்டும். சேலை, அந்தக் காலத்திற்குச் சரியாக இருந்திருக்கலாம். இப்போதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை; இப்போது இந்தக் காலத்திற்கு ஏற்றதுபோல மற்ற விஷயங்களில் மாறுவது போல இதிலும் மாறலாம்” என்றேன்.

படைப்பாளர்:

 ரித்திகா

ரித்திகா (18.06.2005) வயது 18, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினரான இவர் இதுவரை ட்ரெக்கிங், ட்ராவல் சென்ற இடங்கள் : பல்லாவரம் இரண்டு முறை, வொய்ஹெச்ஏஐ வழியாக – இராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடர் (2015), கோவா (2016), இராஜஸ்தான் பாலைவன ட்ரெக்கிங்(2017); சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ வழியாக – ஜவ்வாது மலை ட்ரெக்கிங் (2017), பரம்பிக்குளம் பயணம்(2016), பாண்டிச்சேரி (2017), கோதாவரி பயணம் (2018) ஆகியவை.

ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். கல்லூரியில் படித்து வருகிறார்..