05 & 06.11.18
Travel, அது எல்லாத்தையும் விட ரொம்பப் பெரிய Enjoyment. எதாவது பிடிச்சது கிடைக்காமப் போச்சுன்னா கஷ்டமா இருக்கும்ல ; ஆனா, Travel போயிட்டு வந்தா சரியாப் போயிரும். மனசு happy ஆகிடும்.
நமக்கு ஒரு விஷயம் வேணும் ; அது நம்ம கிட்ட இல்ல. Travel பண்ணும்போது, அது நம்மகிட்ட இல்லேங்கிறதே மறந்துரும்.
நீண்ட பாதையில் போய்க்கிட்டே இருக்கணும். திடீர்னு மழை பேய்ஞ்சு, குளிர்காற்று தொட்டு போய்ட்டு, ஜாலியா பாடிட்டே போய்க்கிட்டு இருக்கணும். அப்ப bag weightடா இருக்குறதே தெரியாது.
நடக்கும்போது வித்தியாசமான stones எடுக்கப் பிடிக்கும்.
இரவில் நட்சத்திரங்கள் பார்த்துப் போய்க்கிட்டே இருக்கணும். Travel பண்ணிட்டு இருக்கும்போது, நட்சத்திரங்கள் பார்க்க எப்பவும் விட அழகா இருக்கும்.
கடல்ல நடக்கும்போது அலை கால்ல பட்டு அப்படியே மேகத்துக்குப் போறாப்ல இருக்கும்.
பல்லாவரம் (10 வயது):
பல்லாவரம் Trekking போனது மலை மேல, ‘ஓ இதுதான் trekkingகா’ interestingகா இருந்தது. ஏன்னா அது போகும்போது ups and downனா போனது பிடிச்சிருந்தது. ஓர் ஆலமரம் பார்த்தேன். அதைப் பிடிச்சி தொங்கணும் போலருந்தது. புடிச்சு தொங்கினா சறுக்கி சறுக்கி விழுந்தேன். அதுக்கப்புறம் போய்ட்டே இருக்கும்போது village road வந்தது. அங்கே அருகில் இருந்த பெட்டிக் கடையில் பெஞ்சில் உட்கார்ந்து டீ குடித்தேன்.
ராஜஸ்தான் (10வயது):
ராஜஸ்தான்ல இறங்குன உடனே சன்ரைஸ் ஹோட்டல் ஆலு பரோட்டோ சாப்பிட்டது நல்லா இருந்தது.
முதன் முதலா tentல தங்கினேன். tentல ஒரு bulb இருந்தது. அது அழகா பிரகாசமா இருந்தது. ராஜஸ்தான் YHAI Camp லீடரை பிடிச்சிருந்தது. அவங்க ஒரு peacock feather குடுத்தாங்க. ட்ரெக்கிங் முடிஞ்சதும், ‘sounds and lights show’ கூட்டிட்டுப் போனாங்க. அது ராணா கும்பா fortல நடந்தது. அப்ப எனக்கு ஒன்னுமே புரியல. ஏன்னா ஹிந்தில சொல்லிட்டு இருந்தாங்க. Atleast காட்சியில புரிஞ்சுக்கலாம்னு பார்த்தா திடீர்னு ஒரு இடத்துல லைட் போடுறாங்க, திடீர்னு சௌண்ட் போடுறாங்க.
கோவா (11வயது):
கோவா’க்கு போனால், எனக்கு கோவா’விலயே இருக்கணும் போல தோணுச்சு. கோவா அவ்ளோ அழகா இருந்துச்சு. கோவா’ல beach walk பண்ணது சூப்பரா இருந்துச்சு. அங்க தண்ணில கடல்கிட்டயே walk பண்ணி போய்ட்டு இருந்தோம். அடுத்தநாள் Para-Sailing பண்ணோம். அங்க இருந்து, கடலைப் பார்க்கும்போது, முழுக்கடலும் sky மாதிரி இருந்தது. அவ்ளோ சந்தோஷம், skyக்குள்ளவே போனமாதிரி.
ட்ரெக்கிங் நடூல காட்டுக்குள்ள போய்க்கிட்டு இருக்கும்போது, கீதா ஆண்ட்டி ‘உஷ் உஷ்’னு சொன்னாங்க. நிலாவும் இருந்தாள். என்ன என்று கேட்டபோது நிலாவும் ‘உஷ்’ன்னாள். கொஞ்சதூரம் அந்த இடத்தைத் தாண்டியதும் நிலாவும், கீதா ஆண்ட்டியும் ‘டைகர் வர்ற மாதிரி ஸ்மெல் வந்துச்சு’. நிலா சொல்றா, ‘ஆண்ட்டி எனக்கும் டைகர் ஸ்மெல் வந்துச்சு. எனக்கு பக்கு’னு ஆச்சு.ரித்திகா வேற பேசிட்டே இருந்தா, டைகர் திடீர்னு வந்துச்சின்னா என்ன பண்றது’.
எனக்கு தோணுச்சு – டைகர் வந்தா என்ன? வரலேன்னா என்ன ன்னு. அப்டி வந்துச்சுன்னா சந்தோஷப்படணும். டைகரை zoo ல பாக்கறது விட, forestல பாக்கறது செம adventure ஆ இருக்கும் – னு.
அப்ப கீதா ஆண்ட்டி, நிலா கிட்ட சொன்னாங்க ‘அப்படி அது வந்துச்சுன்னா – நான் உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் ; நான் உன்னோட ஃப்ரெண்ட். நீயும் என்னை ஒன்னும் பண்ணாத. அப்படி சொன்னா அது போய்டும்’
ட்ரெக்கிங் முடிஞ்சு last day, cruise ship ல போனோம். அது எனக்கு first time shipல போறது. அங்க டான்ஸ் ஆடினோம். சிக்கன் சாப்ட்டோம். கோவா’ல ட்ரெய்ன் பிடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டோம். அங்க உணவு நல்லா இருந்தது. அது போக, அங்கே இருந்த ரெஸ்ட் ரூம் மஹாராணியோட ரெஸ்ட் ரூம் மாதிரி இருந்தது.
ராஜஸ்தான் desert trekking (12 வயது):
இந்த ட்ரெக்கிங்லதான் வந்து first time flightல போனேன்.
Dessert ல walk பண்றது கஷ்டமா இல்ல. பார்த்தா கஷ்டமா தெரியும் ; ஆனா பண்ணும்போது ஈஸியா தெரியும். அடுத்த நாள் camel safari போனோம். அல்க்கா அக்காவோடு போனேன். அதைச் சொல்ல வார்த்தையே இல்ல. அவ்வளவு நல்லா இருந்தது. நான் போன camel பேரு ராஜூ. Raju was very good boy. He was going in a medium speed. He was active. I liked him. எல்லா ஒட்டகமும் rest குடுத்தா உட்கார்ந்திடும். ஆனா ராஜு உட்காரவே இல்லை, போய்க்கிட்டே இருந்தான்.
ஒருநாள் அங்க இருக்குற குள்தாரா fortக்கு போனோம். அங்க பயங்கரமான ஒரு பூதம் இருக்கிறது என்றும், அங்க இருந்து எதாச்சும் எடுத்துக்கிட்டு போனா, for example – mud, stone… அதை வச்சிக்கிட்டு இருக்கிற இடத்தில பேய் வந்துடும் என்றும் guide சொன்னாங்க. அதை test try பண்றதுக்காகவே, அங்க இருந்து ஒரு stone எடுத்துக் கொண்டு வந்தேன். அதை bed roomல வச்சுருக்கேன். ஒருநாள், 2 நாள், 3நாள்…… எத்தனையோ நாள் ஆச்சு. ஆகமொத்தம் பேயே வரலை.
பரம்பிக்குளம் (கேரளா): (12 வயது):
Cot வந்து hostelல இருக்கிற styleல இருந்துது. அதைப் பார்க்கவே அழகா இருந்துச்சு. Bamboo rafting போனோம். அங்க இருந்து ஆறைப் பார்க்க நல்லா இருந்துச்சு.
யானை safari போனோம். அப்ப பெரிய மழை வர ஆரம்பிச்சிடுச்சு. பாவம் அந்த யானை எங்களை எல்லாம் சுமந்து மழைல slowவா போய்ட்டு இருந்துது. மழைல காட்டுக்குள்ள யானைல உட்கார்ந்து போய்கிட்டு இருந்தது நல்லா இருந்தது.
டாப் ஸ்லிப் mountain guide வோட மழைல ட்ரெக்கிங் போய்ட்டு இருந்தோம். Tiger, elephant வுடைய foot print பார்த்தம்.
திண்டிவனம், பாண்டிச்சேரி:
‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ ஆவணப்படம் 1,2 shooting முடிச்சு எதிர்பாராமல் first time metro trainனில் போனோம். நினைச்சுகூடப் பார்க்கல்ல, மெட்ரோ ட்ரெய்ன்ல போவேன்னு.
பாண்டிச்சேரி:
நாங்க கார்லயே சென்னைல இருந்து பாண்டிச்சேரி வரைக்கும் my friend jolly talk போனோம். அங்க பீச் ரோடில் நிலா, செந்தில் அங்கிள், அப்புறம் மின்னு jogging போனம். அதும் நைட் டைம்ல ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி. அங்க fullலா colorful lights இருந்துச்சு.
காரைக்குடி : (அம்மாவும் நானும்):
அம்மாவும் நானும் மட்டும் போன ட்ராவல்ல எனக்குப் பிடித்த ட்ராவல் காரைக்குடி போனது. அங்க நடந்த (இலக்கிய) function எனக்கு boring’கா இல்ல.
காரைக்குடில நாங்க ஜாலியா cards memory game விளையாடினோம். நாங்க நீண்ட walk’ போனோம் evening’ல.
நாங்க அந்த ட்ராவல்ல நிறைய பேசினோம் – எதுவெல்லாமோ sweet nothings!
கட்டுரையாளர்:
ரித்திகா
ரித்திகா (18.06.2005) வயது பதினாறு, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினரான இவர் இதுவரை ட்ரெக்கிங், ட்ராவல் சென்ற இடங்கள் : பல்லாவரம் இரண்டு முறை, வொய்ஹெச்ஏஐ வழியாக – இராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடர் (2015), கோவா (2016), இராஜஸ்தான் பாலைவன ட்ரெக்கிங்(2017); சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ வழியாக – ஜவ்வாது மலை ட்ரெக்கிங் (2017), பரம்பிக்குளம் பயணம்(2016), பாண்டிச்சேரி (2017), கோதாவரி பயணம் (2018) ஆகியவை.
ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துள்ளார். அவர் இரண்டு வருடங்கள் முன்பு எழுதியது இது.
அழகான கட்டுரை ரித்திகா தோழர் ❤ படிக்கிறப்ப, ட்ராவல் போற மாதிரி சந்தோசமா இருந்துச்சு 😍 ஜாலியா நெறைய்ய ட்ரிப் போவோம், நெறைய்யா எழுதுங்க 🤩<3 வாழ்த்துகள் & லவ்ஸ் ❤
தேங்ஸ் தோழர்
Excellent dear ❤️
வணக்கம் ரித்திகா. உங்களின் பயணக் குறிப்பு உங்களைப் போலவே த்ரில்லிங்காக இருந்தது. நான் முதலில் தலைப்பை பார்த்து கொஞ்சம் பெரிய பெண்ணாக் இருக்கும் என்று பார்த்தால், சின்ன குட்டிப் பெண். டிராக்கிங் போயிருக்கிறார் என்றாலே த்ரில் தானே.நானும் உங்க கூடவே நடந்தேன். பயணித்தேன். ஆலமரத்திலிருந்து குதித்தேன். பாரா செயிலிங் போனேனே. நீலக்கடல் அழகை கொள்ளை கொண்டேன்.எழுதியது போதாது. இன்னும் இன்னும் ஏராளமாக பயணித்து எழுதித் தள்ளுங்கள். பயணம் போக இயலாதவர்கள் மக்ழ்வுரட்டும். வாழ்த்துகள் மகளே.. நீண்ட பயணம் அயல்நாடுகளில் ஆல்ப்ஸ் மலையில் நடக்கட்டும். பை
மிக்க நன்றி தோழர்
அருமை ரித்திகா தோழர். இத்தனை வயதுக்குள் எத்தனை பயணங்கள். உங்க பார்வையில் படிக்க அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது. தொடரட்டும் உங்கள் பயணங்களும், எழுத்தும்.
நன்றி எழில் தோழர்
சிறு வயதிலேயே உனது பயண ஆர்வம் மிக்க நன்று.
சாவித்திரி பாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு பற்றி சொல்ல முடியுமா.
எப்படி அதில் சேரலாம்
நன்றி.
முகநூலில் அதன் பக்கத்தைத் தொடருங்கள்.
உங்களுடைய பயண அனுபவங்களையெல்லாம் வாசிக்க அவ்வளவு சந்தோசமா இருந்திச்சு. நீங்க சின்னச் சின்ன விசயங்களைக் கூடக் கவனிக்கிறீங்க. எதிர்காலத்தில நீங்க பெரிய எழுத்தாளரா வருவீங்க. வரணும்கிறது என்னோட ஆசையும்கூட.