12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் வெண்குறிஞ்சி மற்றும் நீலக்குறிஞ்சி மலர்கள், படம் எடுத்த இடம்- அட்டுவம்பட்டி, கொடைக்கானல், 2018

தென்னிந்தியா, இலங்கையில் அதிகம் காணப்படும் மஞ்சள் புருவ கொண்டைக்குருவி (Yellow headed bulbul), பெரும் இசைக் கவிஞராக்கும்! தமிழகத்தில் இவரை எங்கே பார்க்கலாம், எப்படி விசில் அடிக்கிறார் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
படம் எடுத்த இடம்: கணேஷ்குடி, கேரளா

மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் சின்னத் தேன்சிட்டு (Crimson backed sunbird), கீச்சொலி ஸ்பெஷலிஸ்ட். இவரது குரல் கேட்க, மேலும் தகவலறிய இங்கே சொடுக்குங்கள். படம் எடுத்த இடம்: குன்னூர் சிம்ஸ் பூங்கா

செந்தலைப் பஞ்சுருட்டான் (Chestnut headed bee eater) தெற்காசியா முழுக்க காணலாம். இவரது ஸ்பெஷல் பறக்கும் போது கழுத்தில் தெரியும் ‘டை’! இவரைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். படம் எடுத்த இடம்: மறையூர், சின்னார்

ஒளி ஓவியர்

அனிதா வீரவேந்தன்

புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காகத் தொடங்கி, இன்று தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ‘பேர்ட் ஃபோட்டோகிராஃபர்களில்’ மிக முக்கியமானவர். அரிய பறவைகளை அடையாளம் காண வேண்டுமா, அனிதாவுடம் கேளுங்கள் எனுமளவுக்கு வேலையில் சுட்டி! மன அழுத்தத்தை விடுத்து விடுதலை உணர்வை புகைப்படமெடுப்பதில் பெறலாம் என்று சொல்கிறார். நம் வீட்டு புழக்கடையில் இருந்தே பறவைகளை ஒளிப்படங்களாக ‘சுடலாம்’ என்றும் சொல்கிறார்!