ஹெர் ஸ்டோரிஸ் நடத்தும் பெண்ணெழுத்து பரிசுப் போட்டி!

பெண்களின் அனுபவங்களை முன்நிறுத்துதல்
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்தல்
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை முன்னெடுத்தல்
பெண்களின் குரலை முன்நிறுத்துதல்
பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துதல்
பாரம்பரிய பாலின எதிர்பார்ப்புகளை கேள்விக்குட்படுத்துதல்

இவற்றை முன்வைத்து பெண் எழுத்தாளர்களால் இந்தப் போட்டிக்கென எழுதப்படும் படைப்புகளுக்கு பரிசுகள்! பங்கேற்க தோழர்களை அன்புடன் அழைக்கிறோம்!

விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

  • போட்டியின் நோக்கம்
    பெண்ணெழுத்தை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த பெண்ணிய நூல்களுக்கான பரிசுகள் மற்றும் பெண்ணிய எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தல்.
  • போட்டி காலம்: ஏப்ரல் 1, 2025 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை.
  • விருது வழங்கும் விழா: நவம்பர் 2025 (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
  • போட்டி வகைகள் (பரிசுகள்)
    இந்த போட்டியில் பின்வரும் 8 வகைமைகளில் நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
    • சிறந்த பெண்ணிய சிறுகதைத் தொகுப்பு
    • சிறந்த பெண்ணிய நாவல்
    • சிறந்த பெண்ணிய வரலாற்று நூல்
    • சிறந்த பெண்ணிய அறிவியல் நூல்
    • சிறந்த பெண்ணிய நூல் (பொது)
    • சிறந்த பெண்ணிய சிறார் நூல்
    • சிறந்த பெண்ணிய மொழிபெயர்ப்பு நூல்
    • சிறந்த பெண்ணிய பகுத்தறிவு நூல்
  • பரிசுத் தொகை: போட்டி வகைகள் (8) ஒவ்வொன்றுக்கும்: ரூ. 10,000/-
    தகுதி நிபந்தனைகள்:

அ. பங்கேற்பாளர்கள்
பெண் எழுத்தாளர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.

ஆ. நூலின் தன்மை
பெண்ணியம் பேசும் நூலாக இருக்க வேண்டும்.

இ. புதிய படைப்பு
இந்த போட்டிக்காக புதிதாக எழுதப்பட்ட நூல்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஏற்கனவே வெளியான படைப்புகள் ஏற்கப்பட மாட்டாது.

ஈ. எழுத்தாளர் உறுதிமொழி
நூல் முற்றிலும் தனது சொந்த படைப்பு என்பதை உறுதி செய்யும் உறுதிமொழிக் கடிதம் இணைக்கப்பட வேண்டும்.

உ. நூல் வரையறைகள்
1. சொற்களின் எண்ணிக்கை: குறைந்தது 25,000 சொற்கள் இருக்க வேண்டும். 2. சிறார் நூலுக்கு சொல் / பக்க வரையறை இல்லை.
3. அதிகபட்ச பக்க எண்ணிக்கை: கட்டுப்பாடு இல்லை.
4. மொழி: தமிழ் மொழியில் மட்டுமே இருக்க வேண்டும்.
5. வடிவம்: யுனிகோடு எழுத்துரு பயன்படுத்தப்பட வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள்
அ. நூலின் MS Word வடிவம் (.doc அல்லது .docx) அல்லது Google Docs link with sharing option
ஆ. எழுத்தாளரின் விவரங்கள்:

  • முழுப்பெயர்
  • தொடர்பு எண்
  • மின்னஞ்சல் முகவரி
  • முகநூல்/ட்விட்டர் ஐடி (இருந்தால்)
  • சுருக்கமான சுயவிவரம் (300 சொற்களுக்குள்)
    இ. நூலின் சுருக்கம்: 500 சொற்களுக்குள்
    ஈ. உறுதிமொழிக் கடிதம்

சமர்ப்பிக்கும் முறை
அ. மின்னஞ்சல் மூலம்: அனைத்து ஆவணங்களையும் herstoriescompetition@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆ. பொருள் வரி (Subject Line): “ஹெர் ஸ்டோரிஸ் போட்டி – [நூலின் தலைப்பு] – [வகை]” என்று குறிப்பிட வேண்டும்.
இ. கடைசி நாள்: ஆகஸ்ட் 31, 2025 நள்ளிரவு 11:59 மணி வரை.

வெற்றிபெற்ற நூல்களுக்கு…
அ. பரிசுத் தொகை: ரூ. 10,000/- (ஒவ்வொரு வகைக்கும்)
ஆ. வெளியீடு: வெற்றிபெற்ற நூல்கள் மற்றும் வெளியீட்டுக்குத் தகுந்தவை எனத் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள், ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வரும் சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்படும்.

பதிப்புரிமை விவரங்கள்
அ. உரிமை: படைப்பாளியே நூலின் பதிப்புரிமை உரிமையாளராக இருப்பார்.
ஆ. வெளியீட்டு உரிமை: வெற்றிபெற்ற நூல்களுக்கு, ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துடன் தனிப்பட்ட வெளியீட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
இ. ராயல்டி: நூலின் விற்பனை வருவாயில் இருந்து ஒப்பந்தத்தின்படி ராயல்டி வழங்கப்படும்.

தொடர்பு தகவல்கள்
• மின்னஞ்சல்: herstoriescompetition@gmail.com
• தொலைபேசி:
• முகநூல்:
• இணையதளம்: www.herstories.xyz

சில கேள்விகள்… விளக்கங்கள்…

  • ஆண் எழுத்தாளர்கள் பங்கேற்கலாமா?
    இல்லை. இந்தப் போட்டி பெண் எழுத்தாளர்களுக்கு மட்டுமே.
  • ‘பெண்ணியம் பேசும் நூல்’ என்பதை எப்படி நிர்ணயிப்பது?
    பெண்ணியம் பேசும் நூல் என்பது பெண்களின் அனுபவங்களை, உரிமைகளை, சவால்களை மையப்படுத்துவது; பாலினச் சமத்துவத்தை, பெண்களின் அதிகாரமளிப்பை ஊக்குவிப்பது; பாரம்பரியப் பாலினக் கட்டமைப்புகளை கேள்விக்குட்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இது பெண்களின் குரலை, பார்வையை முன்னிறுத்தும் நூலாக இருக்க வேண்டும்.
  • ஏற்கனவே எழுதப்பட்ட ஆனால் வெளியிடப்படாத நூல்களை சமர்ப்பிக்கலாமா?
    இல்லை, இந்த போட்டிக்காக புதிதாக எழுதப்பட்ட நூல்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • ஒரே எழுத்தாளர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் பங்கேற்கலாமா?
    ஒரே எழுத்தாளர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் பங்கேற்கலாம். ஆனால், ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி நூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
  • கூட்டு எழுத்தாளர்கள் பங்கேற்கலாமா?
    அனைத்து எழுத்தாளர்களும் பெண்களாக இருக்க வேண்டும்.
  • எந்த மொழிகளில் நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்?
    தமிழ் மொழியில் மட்டுமே.

இந்த விதிமுறைகளில் மாற்றம் செய்யும் உரிமை ஹெர் ஸ்டோரிஸ் அமைப்புக்கு உண்டு. அத்தகைய மாற்றங்கள் அனைத்தும் www.herstories.xyz இணையதளத்தில் அறிவிக்கப்படும்.