UNLEASH THE UNTOLD

அனுரத்னா

கருப்பைவாய் புற்றுநோய் எனும் ஆபத்து...

கருப்பைவாய் பகுதியில் உள்ள செல்கள் இயல்பு நிலையை மீறி கட்டுப்பாடற்ற ஒழுங்கற்ற முறையில் பெருகுவதையே கருப்பைவாய் புற்றுநோய் என்கிறோம். ஆரம்ப நிலையில் இதைக் கண்டறிந்தால் முற்றிலும் குணம் அடைய முடியும். ஆரம்ப நிலையில் தவறவிட்டுவிட்டால் இந்நோய் நாளடைவில் முற்றி அதனைச் சுற்றியுள்ள மற்ற உறுப்புகளுக்கும் பரவும். இதனால் உறுப்புகள் செயலிழந்து இறப்பை ஏற்படுத்தும்.

தனி மனித எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம்!

வளர் இளம் பருவத்தினரைக் கையாள்வது என்பது இருமுனை கத்தியைக் கையாள்வதைப் போல மிக முக்கியமானது. ஏனெனில் இப்பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள் பல்வேறு வடிவங்களையும் தன்மையையும் உடையது. ஆனால், இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்த செயல்திறன் அவசியம்.

நீங்களே மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யலாம்!

மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டிய எல்லை என்பது அக்குளின் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி மார்பின் கீழ்பகுதி, நெஞ்செலும்பின் நடுப்பகுதி, காறை எலும்பின் மேல்பகுதி வரை சென்று மீண்டும் அக்குள் பகுதிவரை சென்று முடியும்.

வாடகைத் தாய்- அறிவியலும் சட்டமும் சொல்வது என்ன?

கரு வளர இடம் கொடுக்கமுடியாத கர்ப்பப்பை உள்ள பெண்கள், நாற்பது வாரங்களுக்கு இன்னொருவரின் கர்ப்பப்பையை வாடகைக்கு(!) எடுப்பதுதான் வாடகைத்தாய்.