டிபன் பாக்ஸ்
லஞ்ச் வேண்டாம் என்று காலையில் என்கிட்ட சொன்னால் என்ன? அவள்தானே இன்னிக்கு லெமன் ரைஸ் கேட்டாள். அவளுக்கு மட்டும் தனியாகச் செய்து கொடுத்தால், இப்படிச் செய்கிறாள். என்ன பண்ணுவது? எல்லாம் நம் தலையெழுத்து என்று புலம்பிக்கொண்டே லஞ்ச் பேக்கை உள்ளே வைத்துவிட்டு, தேநீர் கோப்பையை எடுத்தாள். பால் ஏடுகட்டி ஆறிப் போயிருந்தது. என்ன வாழ்க்கை இது? ஒரு டீகூட நிம்மதியா குடிக்க முடியவில்லை.