UNLEASH THE UNTOLD

ரித்திகா டைம்

ஓர் ஒற்றைப் பெற்றோரின் மகள்

பொதுவாகக் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னுடைய செயலுக்குப் பொறுப்பு ஏற்கும் தன்மையுடனும் வளர வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சிறிய வயதில் இருக்கும் போது பெற்றோர் ஏன் கண்டிக்கிறார்கள் என்று நினைப்பார்கள். அது சிறிது வளர வளரப் புரியும். நல்ல பெற்றோருக்குத் தெரியும் ‘எவ்வளவு அன்பு செலுத்த வேண்டும் எப்போது கண்டிக்க வேண்டும்’ என்று.

அற்புதமான இமயமலைப் பயணம்!

அடுத்த நாளும் பனியில் மலையேற்றம் செய்தோம். கால்களை எப்படிப் பனியில் வைக்க வேண்டும் என்று இந்த கேம்பில் இருந்து புறப்படும் பொழுதே கூறிவிட்டார்கள். நடக்கும்போது, ஒன்று முன் பாதத்தை உறுதியாக அழுத்தி வைக்க வேண்டும் அல்லது குதிகாலை அழுத்தி வைத்து நடக்க வேண்டும். பனி, பார்ப்பதைப் போல் இனிமையாக இருக்காது. சிறிது சறுக்கினாலும் விழுந்து விடுவோம். விழுவதில் ஒன்றும் இல்லை. திரும்பியும் எழுவதில்தான் இருக்கிறது. வழிகாட்டி ‘கரம்’ திடீரென்று எங்கிருந்து வருகிறார் என்பதே தெரியாமல் மின்னல் போல வந்து உதவி செய்வார்.

டே கேர் நாள்கள்...

மரியாதை என்பது மனதிலும் ஒருவரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதிலும்தான் இருக்கிறது; அவரவர் அவர் பெயர்களுக்குப் பின்னாடி ‘அக்கா, அண்ணா’ என்று அழைப்பதில் இல்லை; அப்படி உங்களை யாராவது கூப்பிட வேண்டும் என்று நினைத்தால் அது உங்களின் விருப்பம்; அதேபோல அப்படிக் கூப்பிட விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தத் தேவையில்லை.

சேலை கட்டினால்தான் பாரம்பரியமா?

சேலையைக் கட்டினால் நம் கவனம் முழுவதும் சேலையில்தான் இருக்க வேண்டும். சேலை விலகாமல், சரிசெய்துகொண்டே இருக்க வேண்டும். உடை என்பது ஒருவருக்கு வசதியாக இருக்கிறதா என்பதைப் பொறுத்துதான், அது பிடித்த உடையாக இருக்க முடியும்.

'கிராப் கட்’ என்றாலே ஆண்கள்தாமா?

ஆண்கள் நீளமாக முடி வைத்திருந்தால் மேம் என்றா கூப்பிடுகிறார்கள்? கூப்பிடுவதுகூட பரவாயில்லை. கிராப் கட் செய்து இருந்தால் அது ஆண்தான் என்று எப்படி முத்திரை குத்த முடியும்?