UNLEASH THE UNTOLD

சுகிதா பக்கங்கள்

இனப்பெருக்க ஆரோக்கியம் அடிப்படை உரிமை

கர்ப்பக் காலப் பராமரிப்பு, ரத்தசோகையைத் தவிர்த்தல், ஆரோக்கிய உணவிற்கான அறிவுரைகள், பால்வினை நோய்களுக்கான சிகிச்சைகள், மாதவிடாய் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளித்தல், மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் பேணல், உடலுறவு குறித்த சந்தேகங்களையும் அச்சங்களையும் அகற்றுதல் உள்ளிட்டவை அடங்கிய பாலியல் கல்வியை இளைஞர்களுக்கு வழங்குதல் அவசியம் தேவை.

சுயமரியாதைக்காகப் போராடும் வானவில்!

உலகெங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர். இந்தியாவிலும் ஆண், பெண் இரண்டு தரப்பில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளை பாலின சமத்துவத்தோடு அணுகுகிறோமா?

படிக்கட்டுகள் இருக்கும் இடங்களில் எல்லாம் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான ஏதுவான சாய்தளங்கள், சக்கரநாற்காலிகள் செல்வதற்கான சூழலே இல்லாத நிலை தான். இதனால் பல மாணவிகளால் தொடர்ந்து கல்வி கற்கும் சூழல் இல்லை. அப்படியே தரைதளத்தில் வகுப்பறைகள் இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான கழிப்பறைகள், சோதனைக் கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை இருப்பதில்லை. அதனால் அவர்கள் பாதியிலயே கல்வியைவிடக்கூடிய சூழல்தான் உள்ளது.

பெண்ணுடல் மீதான வன்முறை: இந்தியாவின் இருண்ட பக்கங்களின் கசக்கும் உண்மை

பாலியல் வன்முறை, அதிகார வன்முறை, பாலினஅடிப்படையில் சீண்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துதல் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான குற்றங்கள். பெண்கள் நவநாகரிகமாக இருத்தலும் குற்றமாகப் பார்க்கிறது இந்தச் சமூகம். பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறுத்துள்ள கோடுகளை உடைத்தெறியும் பெண்கள் மீது இந்தச் சமூகத்திற்கு வெறுப்பு ஏற்படுகிறது.