UNLEASH THE UNTOLD

கதை

மருதன் பெருவிருந்து

மரப்பட்டையின் சுகந்தம் தலைமுடியின் வேர்கள் வழியே அவளுக்கு மணந்தது. கண்விழித்துத் தலையை நிமிர்த்தினாள். கதவிடுக்கின் வழியே வீட்டின் உள்ளிருந்து மருதன் கசிந்திருந்தான்.

தேமாக்காதல்

பத்து நாள்களாகவும் வேம்பின் தலையணையும் விஜியின் தலையணையும் ஒன்றாக ஆகியிருந்தது. இரவில் மொட்டை மாடியில் படுத்தபடியே நட்சத்திரங்களை இணைத்து வேண்டுமானதை வரைந்துகொண்டார்கள் இருவரும். தனது இருபத்தி நான்கு வருடக் கதையையும் வேம்பிடம் சொல்லியிருந்தாள் விஜி.

<strong>நாங்கள் இந்தியர்கள் இல்லையா?</strong>

“ஸ்கூல்ல டீச்சர் என்ன கூப்டாங்க. நா போய் நின்னேன். டீச்சரு என் பேர கேட்டாங்க. நா செய்யது அலி பாத்திமானு சொன்னேன். உடனே, ‘அவங்களா நீங்க?’னு கேட்டாங்க. அப்டினா என்னங்குற மாதிரி அமைதியா முழிச்சிட்டு நின்னேன். ‘அலி’னா என்னனு தெரியுமானு கேட்டாங்க. நா தெரியாதுனு சொன்னேன். என்னைய அனுப்பிட்டு பக்கத்துல இருக்கற டீச்சர்கிட்ட ஏதோ சொல்லி சிரிச்சாங்க. ஏன் மாமா அப்டி பண்ணாங்க…”

பூக்கரு

“இங்க பாரு பூவு, ஒன்னு வச்சேன்னு வையி, வாய் கொட்டாவி விட்டுக்கும். எங்கம்மாவைப் பாத்தியா எப்டித் தவிச்சு நிக்குதுன்னு? அது ஆசைப்பட்டுச்சுன்னுதான் நான் உன்னை இங்க வச்சிக்க சம்மதிச்சேன். இப்ப உன்னால அதுக்கு எதுவும் ஆச்சுன்னு வையி வெளுத்துடுவேன்” என்று சட்டைக் கைகளை மடித்தான் சரவணன்.

தங்கமே வெற்றி...

மாலதிக்கும் வெற்றிக்கும் அப்படியொரு சிரிப்பு அவர்கள் ஜாதகதப் பொருத்தம் போல பொருந்திக் கிளம்பியது. இரண்டும் மகள்களாகப் போய்விட்டதே என்று மாலதியும் சோர்ந்ததில்லை. வெற்றியும் மகனுக்கு முயற்சிக்கவில்லை.

சக்தி

இப்போதெல்லாம் அம்மாவின் ஞாபகங்களும் அவளிடம் கேட்கவென பல கேள்விகளும் சக்திக்கு அடிக்கடி எழுகின்றன. கேட்டால் அவளும் கத்துவாளா? சக்தியின் ஞாபகங்களில் அம்மா அவளுடன் அதிரக் கத்தியதாக நினைவில்லை. மூன்று வயதில் சக்தியைப் பிரிவதற்குள் அப்படி என்ன பெரிய தப்பைதான் செய்துவிடக் கூடும் கத்துவதற்கு என எண்ணிக்கொண்டாள் . ஆனாலும் அவளுக்கு அம்மாவிடம் நிறையக் கோபம் உண்டு. தன்னை விட்டுவிட்டுப்போன கோபம். இப்போதும் அந்தக் கோபம் வந்தது.

தேவியின் மூர்த்தி

“அடேய் காலிப்பயலே… அந்த சின்னப்புள்ளய என்னடா பண்ண??”
“அம்மாடி.. அழாத… சொல்லு. உன்னை என்ன செஞ்சான் இவன்? பயப்படாம சொல்லுடா…”, என்றார் தலைமை ஆசிரியர்.

குட்டிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம்...

‘பாவம் அம்மா. நம்ம நல்லதுக்கு தான் எதுனாலும் பண்ணுவாங்க. நான் வருத்தப்படக்கூடாதுனு தான் சொல்லாம இருந்திருக்கும்.’ இப்போது குட்டிக்கு அம்மாவை அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

சங்கீதாவுக்கு இன்னொரு பட்டம்

இப்போது அவள் மனதில் என்றோ எங்கோ வாசித்த கவிதைவரி ஒன்று தான் நினைவுக்கு வந்தது. “ராமர் கூட வேண்டாம். எங்களைத் தூக்கிச்செல்ல ராவணன் வந்தால் போதும்” என்ற கவிதை வரி.