தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் குணம் மாறாது!
இந்தப் படத்தில் வரும் பெண்ணும் படித்திருப்பாள், நல்ல இடத்தில் வேலை செய்வாள். ஆனால், அந்தக் காதலில் இருந்து வெளியே வருவதைப் பற்றி அவள் யோசித்திருக்கவே மாட்டாள். அது நல்ல உறவில்லை என அவளுக்கும் தோன்றி இருக்காது. ஒரு தோழி மட்டும் அறிவுரை கூறுவாள். “நீங்கள் தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் தன்மை மாறிவிடப் போவதில்லை.”