UNLEASH THE UNTOLD

சக்தி மீனா

அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும்

திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாப் ஆகியோரின் கூட்டணி பற்றி அகிலத்திரட்டின் வரிகள் இவை. கதையின் தொடர்ச்சி: பத்மநாப சுவாமியாக இருந்த திருமால் திருச்செந்தூருக்கு சென்ற பிறகு முருகனாக மாறி விட்டார். முருகனாக…

RSS இயக்கத்தின் தந்தை கோல்வால்கர் தரும் சான்று

இந்த மருமக்கள்தாயம் என்ற சம்மந்தம் முறையினை உருவாக்கியது நம்பூதிரி பிராமணர்களே ஆவர்! நம்பூதிரி பிராமணர்கள் திருவிதாங்கூர் மன்னர்களிடம் தாங்கள் கொண்ட  நெருக்கத்தை பயன்படுத்தி, தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக இந்த கொடிய வழக்கத்தை நடைமுறைப்படுத்தினர். அதை…

பிறப்பால் அந்தணரான நீசன்

கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றினை அகிலத்திரட்டு அம்மானையிலும் படித்து உணர நேர்ந்தது. ஆனால் அவ்வரலாறு அம்மானை வரிகளாக, அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக் கதைகளின் கலப்போடு அகிலத்திரட்டு அம்மானையில் எழுதப்பட்டுள்ளது. ராமாயணம் மஹாபாரதம்…

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பார்ப்பனீயமும் காலனித்துவமும்

பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரையில் மக்களிடம் வரி வசூல் செய்வதில் திருவிதாங்கூர் அரசு கொண்டிருந்த  நிலைப்பாடு தொடர்ந்து வந்த எதிர் காலங்களில் (18, 19ஆம் நூற்றாண்டுகளில்) நிலைகுலைந்தது ஏன்? திருவிதாங்கூர் அரசுக்கு உருவான நெருக்கடி…

வரி வரி எங்கும் வரி

சாணார்* சாதியினர் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில், தங்களை ‘நாடார்’ என்று பெயர் மாற்றி பதிவு செய்யும் வரை, ‘நாடார்’ என்பது சாணார் சாதியின் ஓர் உட்பிரிவாகத்தான் இருந்தது என்பதற்கு மேலும் இரண்டு சான்றுகளை அறிய…

யாரிந்த நீசன்?

கீழ்வரும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் ‘சான்றோர்’ என்று குறிப்பிடப்படுவது நாடார் சாதியினரையே ஆகும். நீசன் என்று குறிப்பிட்டிருப்பது திருவிதாங்கூர் அரசனை ஆகும். மேலும் சாணார்* என்று கட்டுரையில் குறிப்பிடப்படும் மக்கள், இப்போது ‘நாடார்’ என்று…

அகிலத்திரட்டு சொல்லும் சாதி

அய்யா வைகுண்டர், நாடார் (சாணார்) சமூகத்தை சத்திரிய சமூகமாகக் காட்டிப் பெருமிதம் கொள்ளவே இக்கதையை அகிலத்திரட்டில் சேர்த்திருக்கிறார் என்பது எனது கருத்து. அய்யா வைகுண்டரின் இந்த நிலைப்பாட்டிலும் நான் முரண்படுகிறேன். வர்ணப்படிநிலையை முற்றிலும் அழிப்பதே ஏற்றத்தாழ்வை அழிக்கும் வழி! மாறாக, ‘நான் பிராமண வர்ணத்துக் காலுக்குக் கீழ்’ என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?

பரதேவதையும் பெயர் மாற்றமும்

மனிதனுக்குச் சாதி பார்த்து பெயர் சூட்டும் வழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த பெருமையும் மனுநீதி சாஸ்திரத்தையேச் சாரும்.

பரதேவதையை மணமுடித்த முற்போக்காளர் முத்துக்குட்டி

சாதியக் கட்டுப்பாடுகளும், பெண்களுக்கான கட்டுப்பாடுகளும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே, விவாகரத்தான பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொண்ட முற்போக்குவாதி முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்டர்.

திருச்செந்தூர்க் கோயில் நிர்வாகத்தை நம்பூரிகள் எப்போது கைப்பற்றினர்?

அகிலத்திரட்டு எழுதப்பட்ட, 1840ஆம் ஆண்டுக்கு பிறகு பதினொரு ஆண்டுகள் கழித்து, அய்யா வைகுண்டர் இறந்த செய்தியும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய செய்திகளும் அகிலத்திரட்டு அம்மானையில் காணக்கிடைக்கின்றன