அபார்ஷன்
காப்பான கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை பெண்ணின் முன்னேற்றத்தில் ஒரு பெரிய மைல் கல் என்பதில் துளிக்கூடச் சந்தேகமில்லை என்றாலும், கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை, கர்ப்பம் தரிக்காமல் தள்ளிப் போட மேற்கொள்ளும் நடைமுறைகள் ஆணுக்கு மிக எளிதானது. ஆனால், பெரும்பாலும் பெண்தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. எந்தத் தொந்தரவும் தராத ஒரு தரமான ஆணுறை கரு உருவாவதைத் தடுக்க போதும் என்றாலும், பெண்ணின் பிறப்புறுப்புக்குள் செலுத்தப்படும் காப்பர் டி, பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும் ஹார்மோன் மாத்திரைகள்தாம் இன்றளவும் பல பெண்களின் கர்ப்பத் தடை சாதனமாக இருந்து வருகிறது.