கனல் நீர்
பகல் பதினோரு மணி… சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு நியாயவிலைக் கடை அது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதுவும் பெண்கள் வரிசை பெரிதும் நீண்டிருந்தது. மேல்…
பகல் பதினோரு மணி… சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு நியாயவிலைக் கடை அது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதுவும் பெண்கள் வரிசை பெரிதும் நீண்டிருந்தது. மேல்…
நர்மதா பக்கெட்டில் நீரை நிரப்பி சோப்புத்தூளைப் போட்டுக் கலக்கினாள். நுரைத்து வந்த குமிழிகள் சின்னதும், பெரிசுமாகச் சூரிய ஒளியில் வர்ண ஜாலம் காட்டி மினுக்கியது. கையில் கொஞ்சம் நுரையை அள்ளி வைத்து, “ப்ப்பூ..” என்று…
அவளது கையில் நீண்ட தண்டுடன் கூடிய கண்ணாடி மதுக்கிண்ணம். அதில் அவளுக்குப் பிடித்த ‘ஓட்கா காக்டெய்ல்’. செந்நிற மது, விளக்கினொளியில் பளபளத்தது. இப்படி, வருணிக்கப்படுவது மட்டும் அவளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ‘பிலு பிலு’ என்று…
கதவு மெள்ளத் திறந்தது. மாலை வெயிலின் குறைந்த வெளிச்சத்தில் அந்தச் சிறிய உருவம் அறைக்குள்ளே வருவது தெரிந்தது. “ம்மா …” லலிதாவின் ஒன்றரை வயது மகன் கோபி, தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்துவிட்டான் போல. ராஜு பதறி…
“சப்பாத்தி உருட்டுவீங்களா?” இவளை உருட்டச் சொல்லிவிட்டு மகளிடம், “ஏ, குட்டி, சப்பாத்தி போட்டு எடுப்பியா” என்று கேட்டு, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு “இதோ வர்றேன்” என்றபடி சுபத்ரா சென்றாள். கல் காய்வதற்குள் இவள், சுபத்ரா…
‘இந்த மொத்த உலகத்துல, நம்மோட வாழ்க்கைங்கிறது சின்னஞ்சிறிய கண்ணி. எறும்பைவிடச் சின்னது. உலகத்துல நடக்குற எல்லாத்துக்கும், உலகத்தின் மொத்த கன பரிமாணத்துக்கும் நாம மட்டுமே பொறுப்பேத்துக்கிட்டு நம்மளை கஷ்டப்படுத்திக்கக் கூடாது.’
”எனக்கு பன் வேண்டாம் போ, நீ அப்பா வந்தா சோறு செஞ்சி தரேனு தானே சொன்ன? எனக்குச் சோறு வேணும் பசிக்குது” என்று அழுதபடியே கால்களை உதைத்ததில் குழந்தையின் டீ டம்ளர் சாய்ந்து டீ கீழே சிந்தியது.
ரமேஷ் தன்னிடம் அன்பாக இருப்பதில்லை. முகம்கொடுத்து பேசுவதுகூட இல்லை. ஆனால், இப்போது ரமேஷ் அடுத்த நபரிடம் கட்டிய பொண்டாட்டியை விட்டுக்கொடுத்து பேசுவான் எனவும் தெரிந்தது. ‘ஐயோ, இந்தாள நம்பியா நான் புள்ள பெத்துக்கிட்டேன்… கடவுளே’ என நினைக்கையிலே, மனமும் உடலும் வலித்தது.
அவர்கள் போட்டு வைத்திருந்த திட்டம் அனைத்தையும் கொரோனா தகர்த்தெறிந்தது. நிலா அவளது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தாள். அவனுக்கு வீட்டிலிருந்தபடியே மடிக்கணியின் மூலம் ட்ரெயினிங் தொடங்கியிருந்தது. இருவரும் தொலைபேசியில் தொடர்பில் இருந்தார்கள். வீட்டில் இருந்ததால் நிறைய நேரம் பேசிக்கொள்ள முடியாமல் இருந்தாலும் அவர்களின் அன்பின் சாரல் அப்படியே தொடர்ந்துகொண்டிருந்தது.
புது ஆண் ஒருவனைத் தன் பழகிய அறைக்குள் எதிர்பார்த்திருந்தாள் லதா. தள்ளியிருத்தலே பெருமதிப்பு என்றும் முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் தன் உடல் அப்படிச் சொல்லுமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்தது. மணப்பந்தலில் அவன் வாசம் அவளைத் துளைத்தபடியே இருந்தது. உடல் ஒரு போக்காகவும் அவள் ஒரு போக்காகவும் போய்க்கொண்டிருந்தார்கள்.