ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை ஒரு பழங்குடி சமூகத்திலிருந்து நவீன தொழில்நுட்ப சமூகமாக மாற்ற ஆதரவளிக்க வேண்டும் என்று கனவு கண்டார். இதை அடைவதற்காகவே  2009 ல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தனது அமெரிக்க பாஸ்போர்ட்டை கைவிட்டார். இருப்பினும், இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவரது பதவிக்காலம் 2021 ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.  ஒரு கடினமான சவாலையும்  அவமானகரமான முடிவையும் கானியின் ஜனாதிபதிப் பதவி எதிர்கொண்டது. இறுதியில் நாட்டை தாலிபான்களிடம் விட்டுவிட்டு தப்பியோடினார்

கானி நாட்டை விட்டு வெளியேறியதை ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா ஒரு ஆன்லைன் வீடியோவில் உறுதிப்படுத்தினார்.

தலைமறைவாகியிருக்கும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கானி, ஆழமாக வேரூன்றிய அரசாங்க ஊழலுக்கு எதிராக சிறிதளவு முன்னேறியவர். ஆனால் தாலிபான்களுடன் முன்னேறத் தவறிவிட்டார். மேலும் மிகவும் தேவைப்படும்போது நாட்டைக் கைவிட்டார். தாலிபான் போராளிகள் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை ஆக்கிரமித்திருந்த வாரங்களில் கூட அவர் அதிர்ச்சியில் அல்லது மறுப்பில் இருந்தார். மோதலைப் பற்றி எந்த பொது அறிக்கையையும் வெளியிடவில்லை. ஊடகச் சந்திப்புகள் பத்திரிகை  மாநாடுகளை நடத்தவோ செய்திகள் எதனையும் அறிவிக்கவோ இல்லை.  

ஆகஸ்ட் 14, 2021 சனிக்கிழமையன்று, அரசாங்கம் ஒரு சுருக்கமான வீடியோவை ஒளிபரப்பியது. அதில் கானி ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளைப் பாராட்டினார். மேலும் அவர்கள் வெற்றிபெறத்தக்களவு துணிவு பெற்றவர்கள் என அறிவித்தார். அவர் ராஜினாமா செய்வதைக் குறிப்பிடவில்லை. 

2014 இல் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு, கானி வெளிநாட்டில் ஒரு நட்சத்திர வாழ்க்கையை அனுபவித்தார். கல்வியாளரும் பொருளாதார நிபுணருமான அவர் தோல்வியடைந்த சிதைந்த நாடுகளை மீளக் கட்டியெழுப்புவதைப் பற்றி அதிக அக்கறையை வெளிப்படுத்தினார். 

Ghani, PC: cnbc

கானி 1983 இல் அமெரிக்காவில் மானுடவியல் பேராசிரியராக மாறுவதற்கு முன்பு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முன்னணி சர்வதேச நிபுணர்களில் ஒருவராக வெளிநாடுகளில் ஒரு சிறந்த வாழ்க்கையை கொண்டிருந்தார்.

தோல்வியுற்ற அரசுகளைச் சரிசெய்தல் (Fixing Failed States: A Framework for Rebuilding a Fractured World) என்ற அவரது புத்தகம்  பெரிய அளவில் கவனயீர்ப்பைப் பெற்றது.  அத்துடன் 2010 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 100 உலகளாவிய சிந்தனையாளர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.

1990 களின் நடுப்பகுதியில் உலக வங்கியில் பணிபுரிந்தார். ரஷ்ய நிலக்கரித் துறையில் நிபுணராகவும் இருந்தார்.  இறுதியாக 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தலிபான்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஐ.நா.வின் மூத்த ஆலோசகராக 24 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்குத்  திரும்பினார்.

அடுத்தடுத்த நாட்களில், இடைக்கால அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பிடித்தார். 2002 முதல் 2004 வரை ஜனாதிபதி ஹமீத் கர்சாயின் கீழ் சக்திவாய்ந்த நிதி அமைச்சரானார். பெருகிவரும் ஊழலுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.

Abdullah Abdullah, PC: BBC

2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 72 வயதான கானியின் ஜனாதிபதி பதவி ஒரு புதிய வெடிப்பை உருவாக்கியது.  2014 இலும் 2019 தேர்தல்களிலும் கானியின் முதல் போட்டியாளராக இருந்தவர் அப்துல்லா அப்துல்லா. 2019 தேர்தல் முடிவுகளில் எழுந்த மோசடிக்  குற்றச்சாட்டுகளால் ஐ.நா.சபை தலையிட்டு அவசரமாக மீண்டும் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்தது. எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிப்பு நீண்ட காலத்தை இழுத்தது. ஒரு மார்க்கமாக இந்த சர்ச்சை முடிவற்றதாக நிரூபிக்கப்பட்டபோது, ​​அப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஜான் எஃப் கெர்ரி இருவருக்கும் இடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தார்.  இது உண்மையில் ஒரு பதட்டமான, பிளவுபடுத்தும் ஒரு ஏற்பாடு. இதன்போது ஆப்கானிஸ்தானும் மேற்கத்திய சக்திகளும் கானி பற்றிய தங்கள் கருத்துகளில் பிளவுபட்டன. 

ஒருபுறம், அவர் நிபுணத்துவ ஆற்றலுக்காக புகழ் பெற்றார் என்பதும் உண்மை. அவர் ஒரு புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தினார். வரி முறையை சீரமைத்தார். வெளிநாடுகளில் வாழும் வசதிபடைத்த ஆப்கானிஸ்தானியர்கள் நாடு திரும்பவும், வெளிநாட்டு செல்வந்தவர்கள் முதலீடு செய்யவும் அழைத்தார். மேலும் தாலிபான் சகாப்தத்தின் இருண்ட காலத்திலிருந்த நாட்டுக்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கைகளால் நாட்டைக் கட்டியெழுப்ப நன்கொடையாளர்களைக் கவர்ந்தார். 

மறுபுறம், அவர் தீர்மானமற்றவராக காணப்பட்டார். இதன் விளைவாக, கனி தனது கடைசி ஆண்டுகளில் வாஷிங்டனுக்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இருந்து விலக்கப்படுவதைக் கவனித்தார். பின்னர், அமெரிக்க கூட்டாளிகளுக்காக சிறைபிடிக்கப்பட்டிருந்த 5,000 கடினமான கிளர்ச்சியாளர்களை விடுவித்து அமைதி ஒப்பந்தத்தை பூட்டினார். இதற்கிடையில், தாலிபான்கள் இவரை “கைப்பாவை” என்று நிராகரித்தனர். ஆகஸ்ட் 18, 2021 இல் நாட்டை விட்டுத் தப்பியோடுவதற்கு முன்னைய சில மாதங்களில் ஜனாதிபதி மாளிகையில் கனிக்கு சிறியளவு செல்வாக்கே இருந்தது. ஆப்கானிஸ்தானுடன் தனது நற்பெயரை மேம்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. 

அதிபராகப் பதவியேற்கும் கனி, PC: The NewYork Times

கனி ஜனாதிபதியாக இருந்த போது ​​புதிய தலைமுறை இளம் படித்த ஆப்கானியர்களை தலைமைப் பதவிகளுக்கு நியமிக்க முடிந்தது. அந்த நேரத்தில் நாட்டின் சக்திமிக்க தாழ்வாரங்கள் ஒரு சில உயரடுக்கு நபர்களின் ஆதரவாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. பரவலான ஊழலை எதிர்த்துப் போராடுவதாகவும், நலிந்த பொருளாதாரத்தை சரிசெய்வதாகவும், மத்திய ஆசியாவிற்கும் தெற்காசியாவிற்குமிடையேயான பிராந்திய வர்த்தக மையமாக நாட்டை மாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. 

உண்மையில் ஆப்கானிஸ்தான் வரலாற்றை முழுவதும் கவனிக்கின்ற ஒருவர், கனிக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையிலான இடைவெளியை நிரப்ப முடியாமல்போன காரணங்களில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. 

அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கான சாதகமான முடிவுகள் எட்டியிருந்தும், பயிற்சிகளும் ராணுவ தளவாடங்களும் பெற்ற 3 இலட்சத்திற்கும் அதிகமான அரச ராணுவம் இருந்தும் அவற்றினால் பயனடையாமல் நாட்டையும், நாட்டு மக்களையும் நிர்க்கதியில் தள்ளி ஓடிய கானி சில நாட்களின் பின்பு ”இரத்தக் களரியில் இருந்து நாட்டைக் காப்பாற்றவே அப்படிச் செய்தேன்” என்று கூறியிருந்தார். 

இந்தத் கதையின் முதல்பகுதி   2001 இல் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அமைதி செயல்முறையுடன் ஆரம்பமாகிறது. ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டுவரும் முன்மொழிவுகளையும் பேச்சுவார்த்தைகளையும் உள்ளடக்கியது அமைதி செயல்முறை ஆப்கானிஸ்தான் அரசுக்கும், அமெரிக்க துருப்புகளுக்கு எதிராகப் போராடும் முக்கிய கிளர்ச்சிக் குழுவான தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட படிமுறைகளைக் கொண்டதாக இருந்தபோதும்,  அமைதிப் பேச்சுவார்த்தைகள் 2018 இல் தீவிரமடைந்தது.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக நாட்டுக்குள் அந்நிய நாட்டு வீரர்கள் இருந்தனர். அமெரிக்காவைத் தவிர, சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா உட்பட்ட நேட்டோ போன்ற முக்கிய வல்லரசுகள் சமாதான செயல்முறையை எளிதாக்குவதாக முன்வரிசையில் இருக்கின்றன.  பிராந்திய சர்வதேச சக்திகளின் தலையீடு ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாகப் போர் நிகழ்வதற்கு ஒரு காரணம் என்பது பரவலான கவனத்திற்கு வந்திருந்ததுவும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்தியது.  

அமைதி செயல்முறையின் ஒரு பகுதியாக இரண்டு அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. செப்டம்பர் 22, 2016 அன்று, ஆப்கானிஸ்தான் அரசுக்கும் ஹிஸ்-இ-இஸ்லாமி குல்புதீன் போராளி குழுவுக்குமிடையே முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இரண்டாவது அமைதி ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்குடையே பிப்ரவரி 29, 2020 இல் கையெழுத்திடப்பட்டது.  ஒப்பந்தத்தின் விதிமுறைகளை தாலிபான் உறுதிசெய்தால் 14 மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ”ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு” சர்வதேச சட்டத்தின் கீழ் இறையாண்மை கொண்ட அரசாக அமெரிக்கா உட்பட்ட ஐக்கிய நாடுகளின் உறுப்பினர், சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. ஒரு விரிவான, நிலையான சமாதான உடன்பாட்டை அடைய ஒன்றிணைந்து செயல்படவும் அமெரிக்கா உறுதிபாட்டை வெளிப்படுத்தியது. அனைத்து ஆப்கானியர்களின் நலனுக்காக ஆப்கானிஸ்தானில் போரை முடித்து பிராந்திய நிலைத்தன்மைக்கும் உலகளாவிய பாதுகாப்புக்கும் பங்களிக்கும்  இந்த அமைதி ஒப்பந்தம் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. 

1) அமெரிக்காவினதும் அதன் நட்பு நாடுகளினதும் பாதுகாப்புக்கு எதிராக எந்தவொரு குழு அல்லது தனிநபரும் ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவாதங்களும் அமலாக்க வழிமுறைகள். 

2) ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க, கூட்டணி படைகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு

3) ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய குடியரசு, தாலிபான்கள், பேச்சுவார்த்தை குழு ஆகியவற்றுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் விளைவாக ஒரு அரசியல் தீர்வு

4) நிரந்தர போர் நிறுத்தம்.

இந்த நான்கு பகுதிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஒன்றுக்கொன்று சார்ந்தவை. இந்த அமைதி உடன்படிக்கையானது, நீண்ட வருட சண்டைக்குப் பிறகு தன்னுடனும், அண்டை நாடுகளுடனும் சமாதானத்தையும் இறையாண்மை ஒருங்கிணைந்த ஆப்கானிஸ்தான் நாட்டையும் தேடும் குறிக்கோளை அனைவரிலும் பிரதிபலித்தது. 

தோஹா பேச்சுவார்த்தை, PC: The NewYork Times

ஆனால் ஆப்கானிஸ்தானின் துரதிருஷ்டம் அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்குமிடையிலான உடன்படிக்கைக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான கிளர்ச்சி தாக்குதல்கள் அதிகரித்தன.  ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுக்கும் தலிபான் அதிகாரிகளுக்கிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 2020 இல் கத்தார் தோஹாவில் தொடங்கியது. ஆனால் அதனாலும் பொதுமக்கள் உயிரிழப்பை நிறுத்த முடியவில்லை.  2021 மே, ஜூன் மாதங்களில் கிட்டத்தட்ட 800 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.  1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  

ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட “முற்றிலும்” வேறுபட்டவர்கள்.

ஆப்கானிஸ்தானில் போர் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்திருக்கலாம், ஆனால் ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்காலம் எப்போதையும் விட இன்னும் நிச்சயமற்றதாகத் தெரிகிறது.

(முற்றும்)

பின்னிணைப்பு 

இருபது பகுதிகளாக பிரிக்கப்பட்ட இந்தப் பகுப்பாய்வுக்குப் பயன்படுத்திய மூலாதார விபரங்கள் கீழே. 

”உயிர்த்த ஞாயிறு” புத்தகத்திற்கான ஆய்வில் (2019) சேகரித்த பல தகவல்கள் இந்த பகுப்பாய்வுக்கு உதவின. 

ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், துருக்கி நாடுகளில்  ஊடகத்துறையில் பணியாற்றும் உள்நாட்டு நண்பர்களும், சட்டத்தரணிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தகவல் சேகரிப்பில் பங்களிப்புச் செய்துள்ளார்கள். குறிப்பாக ஆப்கானிஸ்தான் நீதித் திட்டம் (afghanistan justice project) சுயாதீன ஆய்வாளர்கள், சட்டத்தரணிகள், செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய அமைப்பில் பணியாற்றும் தோழர்கள் ஜலீலா மிர்ஸ் ஹைதர், பல்வஷா ஹூசைன் இருவரும் அதிகளவான தவல்களைத் தந்து உதவினார்கள். தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றிய அன்று அதே நகரில் வாழும் பெயர் குறிப்பிட அஞ்சும் ஒரு தோழர் அவரது கணினியில் இருந்த முழுத் தகவல்களையும் அழித்துவிடுவதற்கு முன்பு ”ஆப்கானிஸ்தான் பெண்களின் துயரத்தை எழுத இவை பயன்படட்டும்” என்ற குறிப்புடன் எனக்கும் வேறு சிலருக்கும் அனுப்பியிருந்தார். அவற்றை முழுவதும் பயன்படுத்தவில்லை. அவை பெரும்பாலும் ஆசிட் தாக்குதலுக்குள்ளான, பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், வேறு பல தண்டனைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் சம்பவக் கற்கைகள், முழு விபரங்களுடன். 

நர்கிஸ் ஹூசைனி, ஆப்கானிஸ்தான் மாணவி. இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் முதுகலைப்பட்டப்படிப்பு பயில்கிறார். உள்நாட்டு பத்திரிகைச் செய்திகள், அரசாங்க அறிவித்தல்கள், துண்டுப் பிரசுரங்கள், அறிக்கைகள், நேர்காணல்களை சேகரித்துத் தந்ததுடன் மொழிபெயர்ப்பு உதவிகளையும் செய்தார். இஸ்தான்புல் நகரில் வாழும் வெளிநாட்டுப் பெண்கள் குழுவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் பெண்களும் ஏனைய நாட்டுப் பெண்களும் இந்தப் பகுப்பாய்வை சிறப்பாக எழுதுவதற்கு ஊக்கப்படுத்தினார்கள். 

உண்மையில் ஆப்கானிஸ்தானில் பெண்களின் வாழ்வைத் தனியொரு தொடராக எழுதமுடியும். ஆப்கானிஸ்தான் நாட்டுப் பொருளாதாரம் பற்றியும் இந்தப் பகுதியில் எழுதுமாறு என்னைப் பலர் கேட்டிருந்தனர். இந்தப் பகுப்பாய்வு அரசியல் நிகழ்வுகளின் பல முகங்களைப் பேசுவதற்காக என்று ஒரு வரையறையை நானே ஏற்படுத்திக் கொண்டதால் அவற்றை இதனுடன் சேர்க்கவில்லை. ஆனால் போரினால் சிதைந்து போன நாட்டின் வளங்களும், பொருளாதாரமும் முக்கியம் கவனிக்கப்படவேண்டியவை. எனினும் இந்தத் தொடரின் பின்னரும் அவை குறித்து எழுதலாம். 

இவை தவிர பயன்படுத்திய துணை ஆதாரங்களின் விபரங்கள் கீழே. 

Books/ Magzine/ Journal/ Research Papers  

  1. The Afghanistan War and the Breakdown of the Soviet Union, Review of International Studies

               Vol. 25, No. 4 (Oct., 1999), pp. 693-708 (16 pages) Aron, L. (2006) 

  1. The “Mystery” of the Soviet Collapse. Journal of Democracy, 17(2), 21-35. Central Intelligence Agency, Directorate of Intelligence. (1987, February)
  2. The War in Afghanistan. Air and Space Power Journal 1986 March-April.2: 1-8.
  3. The Soviet experience in Afghanistan: lessons to be learned?. Australian Journal of International Affairs, 64(5), 495-509. doi:10.1080/10357718.2010.513366 Hyder, J.A. (2004). 
  4. Cold War (1972–1989): the Collapse of the Soviet Union. In K. Lee Lerner & Brenda Wilmoth Lerner (Eds.), 
  5. Encyclopedia of Espionage, Intelligence, and Security (Vol. 1, pp. 238-241). Detroit: Gale. Minkov, A., & Smolynec, G. (2010). 
  6. 4-D Soviet Style: Defense, Development, Diplomacy, and Disengagement in Afghanistan during the Soviet Period. Part III: Economic Development. Journal Of Slavic Military Studies, 23(4), 597-616. Prakash, A., & Reuveny, R. (1999)
  7.  Sayed Khatab, The Political Thought of Sayyid Qutb: The Theory of Jahiliyyah, Routledge (2006), p. 161
  8. Maududi, Sayyid Abdul al’al (1960). Political Theory of Islam (1993 ed.). Lahore, Pakistan: Islamic Publications. p. 27
  9. Maududi, S. Abul A’al (n.d.). Ahmad, K. (ed.). Economic System of Islam. Translated by Husain, R. Lahore: Islamic Publications. Retrieved 1 March 2018.
  10. Nasr, Seyyed Vali Reza (1996). Mawdudi and the Making of Islamic Revivalism. Oxford University Press. ISBN 978-0-19-535711-0.
  11. Maududi, Maulana (1960). First Principles of the Islamic State. Lahore, Pakistan: Islamic Publications. p. 26
  12. Mawdudi, Sayyid Abu’l-A’la, Islamic Law and Constitution, (Karachi, 1955), p. 48
  13. Maududi, Towards Understanding Islam pp. 4, 11–12, 18–19,
  14. Maududi, Let Us Be Muslims, pp. 53–55
  15.  Sayyid Abu’l-A’la Maududi, A Short History of the Revivalist Movement in Islam, reprint (Lahore: Islamic Publications, 1963), p. iii
  16. Maududi, Purdah and the Status of Woman in Islam, (Lahore, 1979), p. 20
  17.  Blum William, Killing Hope: Us Military and CIA Interventions Since World War II, (1995)  page 88,89)
  18. Butt, Khalid Manzoor and Azhar Javed Siddqi. “Pakistan-Afghanistan Relations from 1978 to 2001: An Analysis”. South Asian Studies 31, no. 2, (2016): 723-744.
  19. Coll, Steve. Ghost Wars: The Secret History of the CIA, Afghanistan and Bin Laden, From the Soviet Invasion to September 10 2001. London: Penguin Books, 2005. Compartim, Programa. Conflict Mapping: Theory and Methodology, Practical Application in Juvenile Justice. Department of Justicia, 2014.
  20. Dixit, Aabha. “The Afghan Civil War: Emergence of the Taliban as Power Broker”. South Asian Survey 2, no. 1, (1995): 111-118.
  21. Gall, Carlotta. The Wrong Enemy: America in Afghanistan 2001-2014. New York: Houghton Mifflin Harcourt, 2014. 
  22. Hilali, A. Z. US Pakistan Relationship: Soviet Invasion of Afghanistan. Great Britain: Ashgate Publishing Limited, 2005. 
  23. Huria, Sonali. “Failed States and Foreign Military Intervention: The Afghanistan Imbroglio,” IPCS Special Report, no. 67 (2009). 
  24. Katzman, Kenneth. “Afghanistan: Post-War Governance, Security, and U.S. Policy”. CRS Report for US Congress, 2004. Khalilzad, Zalmay. “Afghanistan in 1994: Civil War and Disintegration”. Asian Survey 35, no. 2, (1995): 147-152. 
  25. Khalilzad, Zalmay. “Afghanistan in 1995: Civil War and a Mini-Great Game”. Asian Survey 36, no. 2, (1996): 190-195. 
  26. Maass, Citha D. “The Afghanistan Conflict: External Involvement”. Central Asian Survey 18, no. 1 (1999): 65-78.
  27. Wildman, David and Phyllis Bennis. “The War in Afghanistan Goes Global”. Critical Asian Studies 42, no. 3 (2010): 469-480.

Interviews (Tv/Newpaper, TED)

  1. Gulbuddin Hekmatyar, founder, Hezb-e Islami , Afghan political (1975–2016 )  party and former militia (1975–2016), ArianaNews, Afghanistan News – 07.03.2021, TOLOnews Afghanistan – 14.09.2019
  2. Ali A. Olomi, a historian of the Middle East and Islam ,dailyshabah news,18/08/2021 
  3. Burhanuddin Rabbani (President of Afghanistan from 1992 to 2001) the diplomat, Afghanistan’s ‘China Card’ Approach to Pakistan, Part 1: 1991-2014 – 11.04.2019
  4. Ashraf Ghani (President of Afghanistan between September 2014 and August 2021) – Exclusive interview of President Ashraf Ghani with Al-Arabiya, Sep 5, 2019, NATO Engages: A Conversation with H.E. Ashraf Ghani, President, Islamic Republic of Afghanistan – Jul 18, 2018
  5. Fawzia Koofi, Afghan MP and Peace negotiator, Without women’s rights in Afghanistan, democracy will never be complete, Sep 4, 2020/ wion,  Mar 7, 2021

Sisters from, 

  1. Afghan Women’s Network, a non-profit network of women’s organisations in Afghanistan
  2. Afghanistan Justice Project
  3. Sangat Network, Sangat is a feminist network working for gender justice, equality and peace regionally and globally

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள்குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.