ங்கு யாருக்கேனும்

இருள் கை படராத குழந்தைப்

பருவம் இருக்கிறதா

ன்னுடல் தனக்கே புதிரான

பதின்பருவத்தில்

பார்வைகள் படாத தேகம் உள்ளதா

பேருந்துப் பயணங்களில்

கூட்டங்களில்

நெரிசல்களில்

மோதி அழுந்தாத

அருவெறுக்காத பொழுதுகள்

உள்ளனவா

லுவலகங்களில்

அறிவை எதிர்கொள்ள ஏலாதவர்கள்

உடலைச் சிறுமைப்படுத்தாத

நிகழ்வுகளுண்டா

ப்போதும் இந்த உடலை

ஆயிரம் கண்களிலிருந்தும்

லட்சம் கைகளிலிருந்தும்

கோடி நாக்குகளிடமிருந்தும்

தூக்கிச் சுமக்காத நாட்களுண்டா

மெனில், நீங்கள் வளர்ந்தது

சூனியக்காரக் கிழவியின்

யாருமறியா வனத்தின்

கோட்டையில்

புத்தராவதற்கு முந்தைய

சித்தார்த்த அரண்மனையில்

ல்லையெனில், இன்னும் ஏன்

இத்தனை வன்கொலைகள்

மதுடலைப் புரியாத

ஆண்களுக்குச் சொல்ல

ஏதுமில்லை

இது பெண்களுக்கு மட்டும்