19.04.2021
பேசுவோமா??
உங்க மகள் /மகன்கிட்ட நீங்க என்னிக்காவது நீங்க செய்த தவறை நினைத்து வருந்தி பேசியிருக்கிங்களா? என்னிக்காவது நீங்க சந்தித்த தோல்விகளை மனப்பூர்வமா ஏத்துகிட்டு, ஆமா நான் இப்படிலாம் (failures) தோல்விகள் சந்திச்சுருக்கேன் அது என்னை இப்டிலாம் பாதிச்சுதுன்னு Ego இல்லாம சொல்லிருக்கீங்களா?
ஏன் கேக்குறேன்னா இந்திய பெற்றோர்கள் நான் பார்த்தவரை (Success formulas) வெற்றி பெரும் முறைகளைத்தான் சொல்லித்தர முயற்சிக்குறாங்க.. தோல்விகளை எப்டி எதிர்கொள்ளணும்னு சொல்லித்தந்து நான் பார்த்ததில்லை பெரும்பாலும். ஆனால் தோல்வியை தாங்கும் மன பக்குவம் வர்றது தான் மிக சிரமம்.
Emotional Intelligence ஒண்ணு இருக்கு. நம்ம உணர்வுகளை கையாளும் விதம் அது நமக்கு வாழ்வில் மகிழ்ச்சி/வெற்றிகள் பெற முக்கிய காரணியாக இருக்கும். உணர்வுகளை கையாளும் திறன்னும் சொல்லலாம்! நாம புத்திசாலியாக இருப்பதாக நாம நினைக்கலாம், ஆனா உணர்ச்சிகளை கையாளும் விதத்தில் தான், நம்ம வாழ்க்கையில் நமக்கும், நம்மை சுற்றியிருக்கும் மற்ற மனிதர்களுக்கும் நன்மையோ தீமையோ செய்கிறோம். அதில் நாம எல்லாரும் முதிர்ச்சி அடைய சில காலம் ஆகும். பெற்றோர் வளர்ப்பு பொறுத்து வேறுபடும். அதுதான் நம் வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை முடிவு செய்யும்!
#emotionalintelligenceIsLifesTinySecret
காயத்ரி
அற்புதம். மிகச்சிறந்த பதிவு தோழர். நீங்க சொன்ன எல்லாவற்றையும் செய்தும் அதை பிள்ளைகளிடம் பகிர்ந்தும் இருக்கோம் நானும் செம்பாதியும்.
மகள்களுகான துணிவின் துவக்கமே அங்கிருந்துதான் தொடங்கிற்று.
புள்ளைகளுக்கு தோற்க கற்று தரவேண்டும் என்று போகும் எல்லா பயிற்சியிலும் ஆசிரியர்கள் இடமும், பெற்றோர்கள் இடமும் சொல்லிக்கொண்டே வருகிறேன்.
இன்றைக்கு வீட்டில், பள்ளியில், விளையாட்டில் தோற்க பழகாத பிள்ளைகள்தான் வாழ்வில் எதிர்கொள்ளும் தோல்விகளுக்கு தற்கொலையை தீர்வாக தேடுகிறார்கள்…
பிள்ளைகளை தொடர்ந்து தோல்விகளை சுவைக்க செய்வோம். அதன் வழி தொடர் முயற்சியும், பயிற்சியும் வெற்றிக்கு அழைத்து செல்லும் என்று அவர்களுக்கு புரிய வைப்போம்.
மகிழ்ச்சி தோழர்.