UNLEASH THE UNTOLD

Tag: women rights

பெண்களைப் பாதுகாக்கத்தான் ஆண் படைக்கப்பட்டானா?

ஒருத்திக்கு ஒருவன் என்றும் ஆண்களுக்குப் பலதாரம் என்றும் ஆணாதிக்க மரபு வேரூன்றியபோது பெண்ணுடல் ஆண்களுக்குப் பயன்படாத நாட்களில் (மாதவிடாய், கருவுற்றிருக்கும் / பிரசவித்த காலம்) பெண்களை உறைவிடத்திலிருந்து விலக்கி வைக்கப் பழகினர். ஆண் தனது முறையற்ற காமத்திற்காக முன்பைப் போல பரத்தையர் உறைவிடம் நோக்கிச் செல்லாமல், மாதவிடாய் இல்லாத மற்ற மனைவியுடன் கூடும் வாய்ப்பைப் பலதார மணமுறை ஏற்படுத்திக் கொடுத்ததால் மாதவிடாயான தீண்ட வசதியற்ற பெண்ணைத் தீட்டென்று ஒதுக்கி வைப்பது இயல்பு வழக்கானது.

பெண்ணுக்குப் பெண் எதிரியா?

ஊடகங்கள் அறத்தை இழக்காமல் அதன் கடமை உணர்ந்து நடக்க வேண்டும். சமஅளவு எண்ணிக்கையிலுள்ள சக உயிரான பெண்கள் மீது வன்மத்தை கட்டவிழ்த்துவிடுவது ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிகோலாது. வியாபாரம் மட்டும் ஊடகத்தின் அறமாகாது. பொதுச் சமூகத்தின் கொண்டாட்டத்தை, சிந்தனையை மாற்றுவதில் ஊடகத்தின் பங்கு  அலப்பறியது. பண்பாட்டு ரீதியான மாற்றங்களை முன்னெடுப்பதில் பண்பாட்டின் முக்கியக் கூறாக இருக்கக்கூடிய ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அரசியல் சீர்திருத்தத்தைக் காட்டிலும் முக்கியமானது சமூக சீர்திருத்தம் என்பதை வலியுறுத்தவே  அம்பேத்கர் அரசியல் சீர்திருத்தவாதியைக் காட்டிலும் வலிமையானவர் சமூக சீர்திருத்தவாதி என்கிறார்.

ஆண் உரிமைக்கும் குரல் கொடுக்கிறது பெண்ணியம்

தைரியமில்லாத ஆண்களும் உண்டு, வலிமையான பெண்களும் உண்டு. பொதுஇடத்தில் பெண்ணுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், ஆண்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. கேட்க தைரியமில்லாத ஆணை ’நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?’ என்று ஏசுவார்கள். கண்ணீர் வடிக்கும் ஆணிடம், ’ஏண்டா பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்கே?’ என்பார்கள். துக்கத்தை வெளிக்காட்டுவது இருபாலருக்கும் பொதுவானது. ஆனால், ஆண் தனது துக்கத்தை, இயலாமையை வெளிக்காட்டக் கூடாது என்று பொதுப்புத்தி எதிர்பார்க்கிறது.