உலகின் எண்பது நாடுகளில் உள்ள இருபத்தைந்து சதவீத மக்கள் ஆண் பெண்ணை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என்று ஐநா சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பாதிப்பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்றும், இது இயல்பான ஒன்று என்கிற மனநிலையிலும்தான் இன்னும் இருக்கின்றனர். முதல் முறை ஆண் கை ஓங்கும் போதே பெண் தனது ஆட்சேபத்தை வன்மையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இதுவே வாடிக்கையாகிவிடும். கல்வி, வேலை, பொருளாதாரம் என்று எதுவும் ஆணுக்கு பெண்ணை அடிப்பது தவறென்று போதிக்காதது பெரிய ஆச்சரியம்தான். கணவன் என்றாலே அடிக்கும் உரிமையும் தன்னாலே வந்துவிடுவதாகப் பெரும்பாலான ஆண்களும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளிலேயே ஊறிக் கிடந்த பெண்களும் எண்ணிக்கொள்வது தவறென்று உணர்த்த வேண்டும்.
0 min read