UNLEASH THE UNTOLD

Tag: tour

சிவப்பு டைரி

ஆம்ஸ்டர்டாமிற்குச் செல்ல வேண்டும் என்கிற தகவல் கிடைத்தவுடன் நான் செய்த முதல் வேலை ஆன் ஃபிராங்க் ஹவுஸிற்குச் செல்வதற்காக, டிக்கெட் முன்பதிவு செய்ததுதான். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காலை பத்து மணிக்கு இந்த டிக்கெட்டுகள்…

துலிப் மலர்களும் சைக்கிள் சவாரியும்

நெதர்லாந்தின் முக்கிய அடையாளமாக இருப்பது துலிப் மலர்கள். பதினாறாம் நூற்றாண்டில் துருக்கியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த மலர்கள், ஐரோப்பா முழுவதுமே பரவி இருந்தாலும் நெதர்லாந்து அவற்றை முற்றிலுமாகத் தன் வசப்படுத்திக் கொண்டது. கிட்டத்தட்ட…

ஷூக்களும் காற்றாலைகளும் கொஞ்சம் சீஸும்

நெதர்லாந்துக்குச் சென்று வந்ததின் அடையாளமாக, நீங்கள் உங்கள் நண்பரை ஏதேனும் வாங்கி வரச் சொன்னால், அவர் ஷூ அடையாளமிட்ட ஒரு பரிசுப் பொருளை வாங்கி வந்து கொடுத்தால் எப்படி இருக்கும்? என்னை அவமானப்படுத்துகிறாயா என்று…

சாண்ட்வூர்ட் கடற்கரையும் கிளின்க் நூர்ட் ஹாஸ்டலும்

வெற்றிகரமாக ஆம்ஸ்டர்டாம் ஆபிஸைக் கண்டறிவதோடு என் சாகசப் பயணம் முடிவுற்றதா என்றால் இல்லை. மாலை மறுபடியும் ஒரு ட்ரெயின் பிடித்து பயிற்சி முகாம் நடைபெறும் சாண்ட்வூர்ட் (zandvoort ) என்னும் கடற்கரை நகரத்துக்குச் செல்ல…

சரியான நேரத்தில் சரியான கேள்விகள்

சரியான கேள்விகளை சரியான நேரத்தில் கேட்பதின் மூலம் உங்களால் அடுத்தவரின் உதவியைப் பெற முடியும் என்று தெரிவித்தேன் அல்லவா? நான் அதைத் தவறவிட்ட தருணத்தை விவரித்தது போல உபயோகித்தத் தருணத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.  …

முதல் முறை என்பது ஒருமுறை…

பொதுவாகப் பெண்கள் தனியாகப் பயணம் செய்வதில் பெரும் தயக்கம் உள்ளது. எங்கே செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு துணையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் தனியாகச் சென்று பாருங்கள். பின்னர் அதுவே பழகிவிடும்….

      5. அடர்ந்த காட்டுக்குள் ஆற்றுப்படுகை சிற்பங்கள்

அடர்ந்த காடு. உயர உயரமாக மரங்கள். விதவிதமான பறவைகளின் இனிமையான ஒலி. தூரத்தில் சலசலக்கும் நீரின்  ஓசை. மூச்சு வாங்கியது. குழுவின் ‘எளந்தாரிப் பிள்ளைகள்’ எல்லாம் முன்னால் போய்விட்டார்கள். “இன்னும் கொஞ்சதூரம்தான்…. இன்னும் கொஞ்சதூரம்தான்….”…

நினைவை விட்டு அகலாத சுற்றுலா!

மதியம் உணவு நேரம் வந்தது. சிலர் தூக்குவாளியில் சாம்பார் சாதமும் சிலர் புளிச் சாதமும் சிலர் டிபனும் மதிய உணவு எடுத்து வந்திருந்தார்கள். எங்கள் வீட்டில் எப்பவும் இலையில் பொட்டலம் கட்டிதான் கொடுத்து அனுப்புவார்கள். அனைவரும் பகிர்ந்து மதிய உணவை முடித்தோம். உண்ட களைப்பு தூக்கமும் வர ஆரம்பித்தது. ஆலமர நிழலில் அதன் காற்றின் மகிமையும் சேர்ந்து கொண்டதால்.

குழந்தைகளை பள்ளி சுற்றுலாவுக்கு அனுப்புங்கள்!

அன்று பள்ளி முடித்து வந்தும், அடுத்த வாரம் ஒருநாள் வெளியே கூட்டிட்டுப் போகிறார்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். பெரும்பாலான நாட்கள் பள்ளி முடிந்து வரும் போது அப்பாதான் வீட்டில் இருந்து சிற்றுண்டி, பால் தயார் செய்து தருவார். அப்படி இல்லை என்றால் பக்கத்து வீட்டில் சாவி இருக்கும். நானும் அக்காவும் அங்கே இருப்போம். அப்பா, அம்மா வந்ததும் பேசிட்டுச் சொல்றேன் என்றார். இருவரும் போகலாம் என்று அனுமதி கொடுத்ததும் மறுநாள் பள்ளியில் என் பெயர் கொடுத்து விட்டேன்.

டூர் அவ்வளவுதானா?

அருண் தவியாகத் தவித்தபடி இருந்தான். ட்ரெயினுக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் ஸ்டேஷனுக்குப் போய் ட்ரெய்னைப் பிடிக்க வேண்டுமானால் இப்போது கிளம்பினால்தான் முடியும். ஏற்கெனவே இரண்டு கேப் கேன்சல் செய்துவிட்டுக் கிளம்பி விட்டார்கள்.

“அகிலா… டைம் ஆகுது…”

அகிலா திரும்பி முறைத்தாள். அப்பாவுடன் பேசும் போது யாரும் குறுக்கிடக் கூடாது. ‘வரேன் போ’ என்று சமிக்ஞையை ஆறாவது முறையாகச் செய்தாள்.