UNLEASH THE UNTOLD

Tag: rachel carson

சூழலியல் வானில் ஜொலிக்கும் விண்மீன்: ரேச்சல் கார்சன்

1962 ஆம் ஆண்டு, ரேச்சல் கார்சன் எழுதிய ’Silent Spring’ (மௌன வசந்ம்) என்கிற புத்தகம் உலகில் வெகுவேகமாகப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அப்போது அறிமுகமான பூச்சிக்கொல்லியான டிடிடி (TTT) என்கிற மருந்தை விவசாயத்தில் பயன்படுத்துவதால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அழிவையும், மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு அதிகமானது.

சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் பைபிள்

தடை செய்யப்பட்டாலும் அப்போதைய பயன்பாட்டின் நச்சு எதிரொலி இன்று வரை தொடர்கிறது என்பதையே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டிடிடி பயன்பாடு அதிகமாக இருந்த நாற்பதுகளில் குழந்தைகளாக இருந்தவர்களிடம் ஆரம்பித்த பாதிப்பு, அவர்களது மூன்றாம் தலைமுறை வரை தொடர்கிறதாம். “நான் குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். 40களில் குழந்தைகளாக இருந்தவர்களின் மூன்றாம் தலைமுறை, அதாவது அந்தப் பாட்டிகளின் பேத்திகளை ஆராய்ந்து வருகிறேன். இவர்களுக்கு மார்பகப் புற்றுநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன” என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் பார்பரா கோன்.