பாக்கெட் உணவுப்பொருட்களில் குழந்தைகளை எச்சரிக்கும் வாசகங்கள் இடம்பெறுமா?
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) பாக்கெட் உணவுகளுக்கான நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சர்க்கரை மற்றும் கொழுப்பின் அனுமதிக்கப்பட்ட அளவை மீறும் உணவுகள், உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளின்படி, அவை எந்த அளவிற்குக் குறிப்பிடுகின்றன என்பதைக் காட்டும் சிவப்பு மற்றும் பச்சை அடையாளங்கள் பாக்கெட்டின் வெளியில் அச்சிடப்பட வேண்டும் என்ற விதிகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. ஆனால், உணவு நிறுவனங்கள் சர்க்கரைக்கு உள்ள மாற்று பெயர்களான கார்ன் சிரப், பிரக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ் என்று சாமர்த்தியமாக பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுவிடுகின்றன.