அலைபாயும் மனம்...
ஒரு பெண்ணின் பொதுவான மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒரு முறை. அப்போது ஹார்மோன்கள் பலவிதமான மாற்றங்களுக்கு உட்படும். அதிலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாதவிடாய் முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். மூன்றாவது வாரத்தில் உச்சத்திற்குப் போகும், பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பிக்கும். நான்காவது வாரத்தில் படிப்படியாக அதல பாதாளத்துக்குச் சரியும் போதுதான் இந்த ‘மூட் ஸ்விங்’ மெல்ல எட்டிப் பார்க்கும். மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுவலி, தலைவலி, அடிவயிறு கனமாவது, வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி, மார்பகங்கள் இரண்டும் கல் போல கனப்பது போன்றவையும் தோன்றலாம்.