சாதிக்குள் முடங்கும் பாரம்பரியக் கலை
பாரம்பரியத்தைச் சந்ததிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், பொழுதுபோக்காகவும் ஆடப்பட்டு வந்த இந்த வள்ளிக் கும்மி இப்போது சாதிப் போர்வைக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில்தான் இந்த வள்ளிக் கும்மி எழுச்சி பெற்றிருக்கிறது. இது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் முயற்சி என்கிற பெயரில் இளைய தலைமுறையினர் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாகவே இருக்கிறது. மட்டுமன்றி சுய சாதிப் பெருமிதத்தை அவர்களிடம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது. ஏனெனில் இப்போது முகநூலில் சாதிப் பெயர், குலப் பெயர் தாங்கிய இளையோர்களின் முகநூல் கணக்குகள் பல்கிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.