UNLEASH THE UNTOLD

Tag: kavin migu combodia

      5. அடர்ந்த காட்டுக்குள் ஆற்றுப்படுகை சிற்பங்கள்

அடர்ந்த காடு. உயர உயரமாக மரங்கள். விதவிதமான பறவைகளின் இனிமையான ஒலி. தூரத்தில் சலசலக்கும் நீரின்  ஓசை. மூச்சு வாங்கியது. குழுவின் ‘எளந்தாரிப் பிள்ளைகள்’ எல்லாம் முன்னால் போய்விட்டார்கள். “இன்னும் கொஞ்சதூரம்தான்…. இன்னும் கொஞ்சதூரம்தான்….”…

 கனவு தேசமா, மர்ம தேசமா?

இதுவரை உலகில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பெரிதான அங்கோர்வாட், உலகின் எட்டாவது அதிசயம் எனப் பேச்சுக்குச் சொல்லப்பட்டாலும், உண்மையில் காண்போர் மனதைக் கவரும் முதல் அற்புதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். நான் பார்த்த வரையில் அழகால் மயக்கும் தாஜ்மஹாலையும், பகட்டாக எழும்பி நிற்கும் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கையும் பின்னுக்குத் தள்ளி விட்டு என் மனதில் முதலிடத்தில் வந்து நிற்பவை அங்கோர்வாட் கோயில்களே. யுனெஸ்கோவினால், உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, காலம் கடந்து நிற்கும் அந்தச் சிற்ப உலகிற்குள் நுழைந்த நொடியில் என் கனவு தேசம், மர்மதேசமாக மாறியதைப் போன்ற உணர்வு.