UNLEASH THE UNTOLD

Tag: immigrants

புலம்பெயர் குழந்தைகளின் கல்வி - யார் பொறுப்பு?

இன்றைய சூழலில், இதை பற்றி பொதுவெளியில் பேசுவதே தவறு என்பதுபோல, நாம் நடமாடிக் கொண்டிருக்கின்றோம். நாம் பேசாமல் இருந்துவிடலாமா? கூடாது! பொதுவாக ஞாயிறு விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், எரிச்சலுடன் இருப்பார்கள் (பெரியவர்களுக்கும்கூட…

புலம்பெயர் தமிழர்களின் அடையாளச் சிக்கல்கள்

இந்தத் தனிமைதான் நாம் இந்தச் சமூகத்தில் யார் என்கிற கேள்வியை உருவாக்கும். அடுத்து இந்த அந்நிய சமூகத்தில் நமக்கு என்ன அங்கீகாரம் என்று கேள்வி கேட்கவைக்கும். இந்தக் கேள்வி அடுத்ததாக எந்த அடையாளம் மூலம் நாம் அங்கீகாரம் பெற முடியும் என்று யோசிக்க வைக்கும். அப்போது நாம் எது நமக்குப் பெருமை தரும் அடையாளம் என்று நம்புகிறோமோ அந்த அடையாளத்தை முன்நிறுத்தி பேசுவோம். பெரும்பாலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்பவர்கள் மொழி வழியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர். குறிப்பாக, உலகின் பழமையான மொழி என்கிற பெருமையைக் கொண்டுள்ள தமிழர்கள் மொழிப் பற்றின் அடிப்படையில் தங்களை முன்னிருத்திக்கொள்வர்.படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ