UNLEASH THE UNTOLD

Tag: fashion

<strong>துரித ஆடைகளும் சுற்றுச்சூழலும்</strong>

ஓர் ஆடை உற்பத்தியில் தேவைப்படும் நீரின் அளவை எடுத்துக்கொள்வோம். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் செயல்முறையின்போது செலவழியும் நீரை மறைநீர் (Virtual water) என்பார்கள். ஒரு சாதா வெள்ளை நிறப் பருத்தி டீஷர்ட்டை உற்பத்தி செய்ய 2494 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது! ஒரு ஜீன்ஸ் பேண்ட்டை உருவாக்க 8000 முதல் 20,000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது! இவை சாயமேற்றாத உடைகளுக்கான கணக்குகள் மட்டுமே, அதே டீஷர்ட்டில் வண்ணம் வேண்டுமென்றால் கூடுதல் நீரைச் செலவழிக்க வேண்டும்.

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதம்மா...

ஆண் குழந்தைகள் ‘வாளி’ அணிந்திருக்கின்றனர். வாளி என்பது சிறு வளையம். அதன் தொடர்ச்சியாகவே இன்றும் கோயிலில் வைத்து காது குத்தும் விழா ஆண்களுக்கும் நடைபெறுகிறது. எங்கள் ஊரில் அந்தோணியார் கோயிலில் வைத்து அந்தோணியார் பட்டம் வைத்து வாளி போடுவார்கள். அந்தோணியார் பட்டம் என்பது தலையின் வெளிப்புறம் மட்டும் சிறிது முடி வைத்து, மற்ற இடங்களின் மொத்த முடியையும் அகற்றும் வகையிலான மொட்டை.

கவிழ்த்து வைத்த கிண்ணம் போல் பாவாடையும் பஃப் கை சட்டையும்

தாவணி சேலைகளின் மேலாடையாக ரவிக்கை உள்ளது. ரவிக்கை போடும் வழக்கம் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் ஓர் ஊரில் உள்ளவர்கள் அனைவருமே ரவிக்கை போடாமல், புதிதாக வரும் ஒரு மருமகள் மட்டும் ரவிக்கை போடுவதாக எடுக்கப் பட்ட திரைப்படம்.