உடை அனைவருக்கும் பொதுவாகட்டும்!
ஓ, இதுதான் பிரச்னையா? உடை என்பதில் ஏன் இப்படி உயர்வு, தாழ்வு வந்துச்சுன்னு பேசுவோம். ஆதிமனிதர்கள் உடை போட்டிருந்தாங்களா? இன்னும் சில பழங்குடி மக்கள் முதன்மை வாழ்க்கை முறையில் உடை இல்லாம இருக்காங்க. ஆதிமனிதர்கள் தொடக்கத்தில் உடை போடாமத்தான் இருந்தாங்க. நாமதான் குரங்குல இருந்து பல கோடி வருசமா பரிணாமம் அடைஞ்சு மனிதனா வளர்ந்திருக்கோம்னு அறிவியல் அறிஞர் டார்வின் சொன்னார்ல்லயா…” எனத் தொக்கி நின்றது வாக்கியத்தோடு நிறுத்தினார் ஆஷா.