ஜெய ஜெய ஜெய ஜெய ஹே
இந்தியாவில் 95 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கணவனிடம் அடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். மனைவியை அடிப்பது என்பது படித்தவர், படிக்காதவர் , பணக்காரர், ஏழை என்று பாகுபாடு இல்லாமல் ஆண்களிடம் இருந்துவருகிறது.

பாலியல் வன்முறை, அதிகார வன்முறை, பாலினஅடிப்படையில் சீண்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துதல் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான குற்றங்கள். பெண்கள் நவநாகரிகமாக இருத்தலும் குற்றமாகப் பார்க்கிறது இந்தச் சமூகம். பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறுத்துள்ள கோடுகளை உடைத்தெறியும் பெண்கள் மீது இந்தச் சமூகத்திற்கு வெறுப்பு ஏற்படுகிறது.
‘மனதறிவதும் மனம் கோணாமல் நடப்பதும் இருபாலரிடையேயும் இருக்க வேண்டும்’ என மகனுக்கும் மகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.வாழ்வைச் சமன்செய்வது அப்படித்தான்.