ஏழாம் அறிவு
கற்றலும், எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட பயிற்சியும், அறிவாற்றலும் தனிநபரை மட்டுமே சார்ந்ததே தவிர, அது மரபணுக்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாகச் சுற்றுச்சூழலும், உணவு பழக்கவழக்கங்களும், கன உலோகங்கள், கதிர்வீச்சுகள், நச்சுகள் முதலியவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்வதும் தாயனையில் பிறழ்வுகள் ஏற்படுத்தலாம். அதனால் புற்றுநோய் போன்ற நோய்களும் வரலாம். அது அடுத்த தலைமுறையினரைப் பாதிக்கவும் செய்யலாம்.