வந்தியத்தேவனின் வழித்தடத்தில் தம்புளா
கொழும்பில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் மாத்தளை மாவட்டத்தில் இருக்கிறது தம்புளா. 160 மீட்டர் உயரமுள்ள சிறு சிறு குன்றுகள் பரவலாகக் காணப்படுகிறன். அந்தக் குன்றுகளின் மீது தொடர்ச்சியான 5 குகைகள் கொண்ட ஒரு தொகுதியாக இருக்கிறது அந்தக் குடைவரைக் கோயில். உலகின் பெருமதிப்பை அக்குகைகள் பெற்றுள்ளதற்கு, அங்கு பெருந்தொகையாகக் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களுமே காரணமாக இருக்க முடியும். இவ்விடம் முன்பு ஜம்புகோள என அழைக்கப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது.