UNLEASH THE UNTOLD

Tag: Book introduction

அறிவில் பெருகிய சமூகம் ஆரோக்கியத்தில்?

மரபணு பிறழ்வின் காரணமாகச் சிலரின் உடலில் தேவையற்ற மிக அதிகமான செல்கள் உருவாகி, உடலின் ஓரிடத்தில் கட்டியாகப் படியும். அந்தக் கட்டியில் வலி இருக்காது. கட்டிகள் பரவிக்கொண்டே போகும், பெரிதாகிக் கொண்டே போகும். அந்த சைலன்ட் கில்லர்தான் கேன்சர்.

காதலுக்காக காபூலுக்குத் தப்பிச் சென்ற இந்தியப் பெண்

பெண்களைச் சித்திரவதைச் செய்வது என்பது இந்தச் சமூகத்தைப் பொருத்தவரை எந்த ஆணுக்கும் பெரும் வீரச் செயல். என் கணவர் வீட்டில் ஒரு கணம்கூட அமைதியான சிந்தனைக்கு இடமில்லை. ஆப்கானிஸ்தானில் எந்தப் பெண்ணுக்கும் சிந்திக்கவோ கூர்ந்து ஆராயவோ இடமில்லை. சாப்பிடுவீர்கள், அரட்டையடிப்பீர்கள், இருட்டியதும் விளக்குகளுடன் உங்கள் அறைகளுக்குச் சென்றுவிடுவீர்கள். மரபுகள், அடிப்படைவாதம், அறியாமை, கல்வியின்மை ஆகியவற்றின் உறையும் நிழலை எதிர்த்துப் போராடுங்கள். இது வறுமை மற்றும் வேலையின்மைக்கு எதிரான போராட்டம். இங்கே எப்படிப் புதிய சிந்தனைகளின் விதைகள் முளைக்கும்? எப்படி ஒருவர் வித்தியாசமாக சிந்திக்கக் கற்றுக்கொள்ள முடியும்?

நீதிக்கு வாதிப்பேன் நின்று- நூல் அறிமுகம்

‘கத்தோலிக்க பிரமுகர்களின் சத்தியாக்கிரகம்: இந்த ஜில்லாவின் பிரபல நீண்டநாள் காங்கிரஸ்வாதியான ஸ்ரீ ஏ மாசிலாமணியும், அவரது மனைவி ஜெபமணி எம்.எல்.ஏ.வும் இன்று காலை மாதா கோவில் முன் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கரிடையில் யுத்த எதிர்ப்பு கோஷம் செய்து சத்தியாக்கிரகம் செய்தனர்’