UNLEASH THE UNTOLD

Tag: assests

பெண்களும் சொத்துரிமையும்

ஆணோ பெண்ணோ ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்கள் அனைவரும் சட்டப்படி அவர்களின் வாரிசாகக் கருத்தில்கொள்ள வேண்டும். இதில் என்ன புதுமை இருக்கிறது? நான் பெண்ணாக இருப்பதால் என் பெற்றோருக்கு நான் வாரிசு இல்லை என்று…

பெண்களைப் பாதுகாக்கத்தான் ஆண் படைக்கப்பட்டானா?

ஒருத்திக்கு ஒருவன் என்றும் ஆண்களுக்குப் பலதாரம் என்றும் ஆணாதிக்க மரபு வேரூன்றியபோது பெண்ணுடல் ஆண்களுக்குப் பயன்படாத நாட்களில் (மாதவிடாய், கருவுற்றிருக்கும் / பிரசவித்த காலம்) பெண்களை உறைவிடத்திலிருந்து விலக்கி வைக்கப் பழகினர். ஆண் தனது முறையற்ற காமத்திற்காக முன்பைப் போல பரத்தையர் உறைவிடம் நோக்கிச் செல்லாமல், மாதவிடாய் இல்லாத மற்ற மனைவியுடன் கூடும் வாய்ப்பைப் பலதார மணமுறை ஏற்படுத்திக் கொடுத்ததால் மாதவிடாயான தீண்ட வசதியற்ற பெண்ணைத் தீட்டென்று ஒதுக்கி வைப்பது இயல்பு வழக்கானது.