கடந்த செப்டம்பர் 21 அன்று என் ஃபேஸ்புக் கணக்கில் இந்தப் பதிவை எழுதினேன்.
“கட்டுரை ஒன்றுக்காக ஆண்கள் சமைக்கும் “royalty free” புகைப்படங்கள் தேடிக் கொண்டு இருந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் வெளிநாட்டு ஆண்கள், ஸ்டார் செஃப்கள் சமைக்கும் படங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. கிடைத்த ஒரே படம் தோழர் தமிழ்ச்செல்வன் சமைக்கும் இந்து தமிழ் திசை இதழில் வெளியான படம். அதை நன்றியுடன் கட்டுரையில் பகிர்ந்துவிட்டேன்.
ஆண்கள் சமைக்கும் படங்களையே இணையத்தில் பார்க்கமுடியவில்லை என்பதை இங்கு பதிவு செய்கிறேன். வாய்ப்பு இருக்கும் ஆண் தோழர்கள் unsplash/pexels போன்ற தளங்களில் தாங்கள் சமைக்கும் படங்களைப் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும். எங்கள் வீட்டில் இணையர், மகன், தம்பி, அப்பா என எல்லோரும் சமையல் செய்யும் படங்கள் என் அலைபேசியில் இருக்கின்றன. ஆனால் அவை வலைத்தளத்தில் பதிவேற்றும் அளவுக்கு தெளிவுடன் இல்லை. ஒரு படம் தேடி எடுக்குறதுக்குள்ள… சப்பா… ஏனப்பா…”
இந்தப் பதிவைக் கண்டதும் நிறைய ஆண் தோழர்கள் தாங்கள் சமைக்கும் படங்களை என் பதிவுக்கு பின்னூட்டமாக அனுப்பினர். அவர்களில் முதன்முதலாய் தோழர் இனியன் அனுப்பிய அவரது படத்தை முகப்புப் படமாக அந்தக் கட்டுரைக்கு வைத்துவிட்டேன். ஆனாலும் தோழர்கள் பலர் சமைக்கும் படங்களை அனுப்பி வைத்ததைக் கைவிட முடியவில்லை. சமையல் ஒரு survival skill, ஒரு essential skill. அதற்குப் பாலின வகிபாகம் நாம் வகுக்க முடியாது. இதை உறுதி செய்யும் விதம் தோழர்கள் அனுப்பிய படங்களை இந்தப் பதிவில் பகிர்ந்து வைக்கிறேன். படங்கள் அனுப்பிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றி.
தோழர் இனியன்
தோழர் வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்
தோழர் ஜெயமோகன் சுந்தரராஜ்
தோழர் சரவணகுமார் வரதராஜன்
தோழர் சாம் ஜெபசிங்
தோழர் கிறிஸ்து ஞான வள்ளுவன்
புகைப்படங்களை அனுப்பித்தந்த தோழர்கள் அனைவருக்கும் ஹெர் ஸ்டோரிஸின் நன்றி. பதியப்பட்டுள்ள படங்கள் இன்னும் பல ஆண் தோழர்களுக்கு உவகையும் சமைக்கும் ஊக்கமும் தரட்டும்.