UNLEASH THE UNTOLD

சாந்தி சண்முகம்

கிளப்ஹவுஸ் ஐகனை உங்களுக்குத் தெரியுமா?

பதின்மூன்று மில்லியனுக்கும் மேலான ஸ்மார்ட் அலைபேசிகளில் கிளப்ஹவுஸ் செயலியின் எஐகானாக வலம் வரவிருப்பவர் டிரூ கட்டோகா. இவர் ஒரு ஆசிய-அமெரிக்கர்.

எஸ். டி. டி. ன்னா வரலாறு தான?

வேலைக்கு ஆளுங்க தேவைன்னு எல்லா நாட்டுல இருந்தும் மக்களை வரவெச்சு, “வேலை தாரோம், இடம் தாரோம், சாப்பாடு தாரோம்…ஆனா குடியுரிமை மட்டும் கேக்காதீங்க”ன்னு சொல்லி குடியமர்த்தி டெவெலப் (போட்டோஷாப் இல்ல உண்மையான டெவெலப்!) ஆகிட்டாங்க.

வெல்கம் டூ ஏர் அரேபியா

அமெரிக்கா மாப்பிள்ளையும், ஐரோப்பா மாப்பிளையும் கிடைக்கலேன்னா, ஏதோ ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு பெத்தவங்க குடுக்குற கடைசி சாய்ஸ் துபாய் மாப்பிள்ளை.

ஹலோ துபாயா?

தெருவே அமைதியா இருந்தது. நான் துபாய் போறேன்னு சொல்லி வழியனுப்ப நைட்டு ஒரு மணிக்கு எல்லாரும் முழிச்சுட்டா இருப்பாங்க?

மாபெரும் தாஜ் கனவு-3

தாஜ்மஹாலைப் பற்றி அறிய ஒரு விக்கிபீடியா பதிவு போதும். என் பயணக்கதை தேவையில்லை. ஆனால் என் கண்களின் வழியாக தாஜ்மஹாலின் அழகை ரசித்ததை என்றாவது ஒரு நாள் என் வாழ்வில் பதிவு செய்வேன் என்று சொல்லிக் கொண்டேன்.

மாபெரும் தாஜ் கனவு- 2

மாணவர்கள் சிலரின் சலசலப்பு அருகில் கேட்டது. அனைவரும் கூட்டாக ஒரு சிறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். ஆர்வத்தில் நானும் அவர்கள் அருகில் சென்று என்ன என்று பார்த்தேன். அது தன் மகன் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்ட ஷாஜகான் இருந்த சிறை. அங்கு இருந்த ஒரு துளை வழியாக சிறையில் இருந்தபடியே தாஜ்மஹாலை பார்த்தவாறு தன் இறுதி நாட்களை ஷாஜகான் கழித்த வரலாறு என் மனக் கண்ணில் தோன்றியது. கோடிக்கணக்கானவர்களின் மனதை கொள்ளை கொண்ட உலக அதிசயம் ஒன்று அதை உருவாக்கியவனை சிறையில் இருந்து ஒரு துளை வழியே காண வைத்த விதியை என்னவென்று சொல்வது. அரசனே ஆனாலும் அவன் விதியை யாரால் மாற்ற இயலும் .

மாபெரும் தாஜ் கனவு

அதிசயம் என்பது தானாகவே உருவானது என்று எனக்கு நானே நிறைய கற்பனை செய்துவைத்திருந்தேன். நான் வளர வளர அதிசயங்கள் குறித்து சிறிது புரிதல் வந்தது. பள்ளி நாட்களில் கூட ஆசிரியர் அடிக்கடி என்னை அழைத்து உலக அதிசயங்கள் என்ன என்று சொல்லச் சொல்வார். நானும் அதற்காகவே காத்திருந்தது போல ஓடிச் சென்று சொல்வேன். இப்படியாக தாஜ்மஹால் என் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேர் ஊன்றத் தொடங்கியது.