UNLEASH THE UNTOLD

எஸ். பானுலஷ்மி

'தேவதை' எப்படிச் 'சூனியக்காரி'யாக மாற்றப்பட்டார்?

பெண்கள் ஏன் தேவதைகளாக, சூனியக்காரிகளாக கலகக்காரர்களாக மாறியுள்ளார்கள் என்று விலாவாரியாக இந்தப் புத்தகத்தில் அலசப்பட்டுள்ளது. சில கட்டுரைகள் நம் கண்களைக் குளமாக்குகின்றன. சில கட்டுரைகள் நம்மைப் பெருமிதம் கொள்ள வைக்கின்றன. கலங்க வைத்தாலும் பெருமை கொள்ள வைத்தாலும் இதுவரை பார்த்திராத கண்ணோட்டத்தில் வாசிப்பவரை, ’ ‘பெண் உரிமை’ குறித்து சிந்திக்க வைத்துவிடுகின்றன. சுமையைத் தூக்கிக் கொண்டு நடந்தால் சிங்கம் தாக்கிவிடும் என்று அச்சம் கொண்ட பெண்ணின் கதை சுவாரசியமாகவும் நிதர்சனத்தைப் பட்டவர்த்தனமாகத் தோல் உரிக்கிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய புத்தகம்!

பெண்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதில் இருக்கும் பிரச்னைகளையும் மனச்சிக்கல்களையும் அலசி உள்ளார் ஆசிரியர். சிறுநீரை அடக்குவதில் உள்ள சிக்கல்கள் தெரிந்தும் இயற்கைக்கு மாறாக இருப்பினும் அதை இயல்பாக கடந்து வந்தவர்களை என்னவென்று கூறுவது! இந்த மாதிரி நெருக்கடிகளை ஏற்றுக்கொள்வதற்குப் பெண்களை இந்தச் சமூகம் நன்றாகப் பயிற்றுவிக்கிறது. இனி வரும் தலைமுறைகள் இத்தகைய சூழ்நிலைகளை விழிப்புணர்வோடு மனச்சிக்கல்களையும் களைந்து சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கோலிட வேண்டும்.          நாங்கள் பள்ளியில் பயிலும் பொழுது a sound mind in a sound body என்று ஏட்டில் சொல்லிக் கொடுத்தார்களே ஒழிய பண்பாடு என்கிற போர்வையால் பெண்கள் விளையாடாமல் வீட்டில் அடங்கி இருக்கப் பழக்கி விட்டார்கள்.

பெண் விடுதலைக்கான நூல்

ஒருவர் சுயபரிவுடன் இருந்தால்தான் சக்தியோடு இயங்க முடியும் என்கிற கோணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. சுயபரிவு இன்மைதான் பெண்களைச் சுய பச்சாதாபத்தில் தள்ளி சக்தி இல்லாதவர்களாக மாற்றுகிறது. கற்பு என்னும் ஒற்றைச் சொல்லைக் கொண்டே பெண்களின் புத்தி மழுக்கடிக்கப்பட்டு, உணர்வுகள் தூண்டப்பட்டு, அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று சாடுகிறார் ஆசிரியர். பெண்களின் சம்பாத்தியம், தனித்து வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது இவையெல்லாம் பெண்களின் உரிமை என்கிறார்.

இன்றைய தலைமுறைக்கு இன்னும் வலுவான தேவி தேவை...

இந்த நாவலின் ஆரம்பத்திலேயே தேவி படித்தவளாக, சுய சிந்தனை உடையவளாக, தப்பைத் தட்டிக் கேட்கிறவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஓர் ஏழைப் பெண்ணை ஒருவன் அவமானப்படுத்தியதற்கு ஓர் ஆண் என்று ஒதுங்கி விடாமல் அவனை எதிர் கேள்வி கேட்கிறாள்.