4. இணையத்தில் சுழலும் குடும்ப நாவல் உலகம்
அவரவர்களின் தளங்களில் படிக்கவென்று உருவாகிய வாசகர் வட்டங்கள் மூலமாக நாளடைவில் சிலர் பணம் ஈட்டவும் செய்தனர். கூகிள் ஆட் சென்ஸ் (Google adsense) பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தளங்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அதில் வரும் விளம்பரங்களின் சொடுக்குகளைப் பொறுத்தும் அத்தளங்களுக்கு டாலர்கள் வரும். அவற்றின் எண்ணிக்கை நூறு டாலர்களைத் தொடும் போது அது அந்த இணையத்தளத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.