1953 முதல் 1956 வரை
1953 – இந்தியா
- 1953-ம் ஆண்டு, ரயில்வே நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
2. 29 மே 1953, நியூசிலாந்துக்காரர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா டென்சிங் நோர்கே எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தனர். அதன்பொருட்டு இரண்டு அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன. என்னிடம் ஒன்று தான் இருக்கிறது.
3. 1953 -ம் ஆண்டு, தந்தி சேவையின் ரயில்வே நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இரண்டு அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன.
1954 இந்தியா India
- அஞ்சல் போக்குவரத்துத் துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. ஓட்டக்காரர், ஒட்டகத்தில் அஞ்சல் கொண்டு செல்பவர், மாட்டு வண்டியில் அஞ்சல் கொண்டு செல்பவர், என அஞ்சல் துறையின் பரிணாமத்தைச் சொல்லும் ஒரு அஞ்சல்தலை மற்றும் இரண்டு ஏர்மெயில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் நாளை ஒட்டி அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
1954 -ம் ஆண்டு, டெஹ்ராடூனில் நடைபெற்ற 4வது உலக வனவியல் மாநாடு குறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
இந்தியா 1949-ம் ஆண்டு, தொல்பொருள்/ வரலாறு குறித்த அஞ்சல் தலைகளை வெளியிட்டது. 1954-ம் ஆண்டு, அவற்றின் மீது, கம்போடியாவிற்கு உதவும் விதமாக, overprint செய்து, வெளியிட்ட இராணுவ வெளியீட்டு அஞ்சல் தலைகள் இவை. வழக்கமான அஞ்சல்தலைகளுடன் இவை ஒட்டப்படும். இந்தப் பணம், குறிப்பிட்ட செலவிற்கென பயன்படுத்தப்படும்.
முதல் இந்தோசீனாப் போர் 1946 முதல் 1954 வரை நடந்தது. 1954-ம் ஆண்டில், கம்போடியா இப்போரின் இறுதிக்கட்டத்தில் ஈடுபட்டது. 1954 இல் நடந்த ஜெனீவா மாநாட்டில் பிரெஞ்சுப் படைகள் திரும்பப் பெறப்பட்டு கம்போடியாவின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டது.
1955ம் ஆண்டு
1955 -ம் ஆண்டு, இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடர்பான அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன.
1. டிராக்டர்
2 விசைத்தறி
3. கமலை இறைக்கும் காளைகள்.
இவை காங்க்ரேஜ் (Kangrej) என அஞ்சல்தலை தொடர்பான நூலில் வாசித்த நினைவு.
4. திலையா அணை, தாமோதர் பள்ளத்தாக்கு
5. நூல் நூற்கும் பெண் மற்றும் நெசவு செய்யும் பெண்
6 மலேரியா கட்டுப்பாடு
7 சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்
8 இந்துஸ்தான் விமானத் தொழிற்சாலை
9 தொலைபேசி தொழிற்சாலை
10 Rare Earths factory
11 உரத் தொழிற்சாலை, சிந்திரி
12 எஃகு ஆலை
விடுதலை பெற்ற நாட்டின் படிப்படியான வளர்ச்சியும் தொழில்துறை முன்னேற்றமும் இந்த அஞ்சல்தலைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
1956-ம் ஆண்டு
1956-ம் ஆண்டு, புத்தரின் 2,500 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. போதி மரம் பீகார், புத்த கயாவில் உள்ள அரச மரம். இந்த மரத்தின் கீழ், புத்தர் பொ.ஆ.மு 5-ம் நூற்றாண்டில் ஞானம் பெற்றார். குடை மற்றும் போதி மரம் இந்த அஞ்சல்தலைகளில் அச்சிடப்பட்டன.
பால் கங்காதர திலகர் (1856-1920) அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. திலகர் மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் பிறந்தார். திலகர் தொடங்கிய சுதேசி இயக்கம் (உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்தல்) விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறியது. திலகரும் அவரது ஆதரவாளர்களும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தீவிரவாதப் பிரிவு எனப்பட்டனர். திலகர், ஜோசப் பாப்டிஸ்டா, அன்னி பெசன்ட் மற்றும் பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா ஆகியோருடன் சேர்ந்து 1916 இல் ஹோம் ரூல் லீக்கை நிறுவினார்.
வாட்டர்மார்க் கொண்ட இந்தியா வரைபட அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன. இவை Multi-Star Watermark கொண்டவை. வாட்டர்மார்க் என்பது ஒரு மங்கலான வடிவம். இந்த வடிவம், அஞ்சல் தலையை தண்ணீரில் வைத்துப் பார்த்தால் தெரியும். Multi-Star Watermark என்பது வேறு வேறு வடிவங்கள் இருக்கும் அஞ்சல் தலை என ஒருவர் சொன்னார். நான் பரிசோதித்துப் பார்த்ததில்லை.
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.





தொடர்ந்து பதிவிடவும்
நன்றி. தொடர்ந்து பதிவிட முயலுகிறேன்.